இம்மாத கவி
எரிக்க முடியாத உள்ளுணர்வாக நீ.
என்னை பத்திரமாக தொலைக்கிறாய்..
இரவுகளும் தூங்கிப்போனது உன் நினைவுகளில்..
மழைத்தரும் ஈரமும், குளுமையும்
உன் முத்தவெப்பத்தில் உணர்கிறேன்..
நிலைக்கொள்ளாத அழகு, நிலைக்கண்ணாடியில்
நீ முன் நிற்கையில்...
உனை சேர நான்
மடிந்து பிறக்க விழைகிறேன்..
மோகத்தீயின் உச்சம்தான் காதல்...
பெருகும் அன்பை ஓர் முத்தத்தில் அடக்க முயல்வதே முயற்சி...
வெயிலில் நனைந்து, மழையில்
காய்ந்தும் போக பழகியவள்..
நீ உடன் இருக்கையில்..
விருப்பப்பட்டு
மாய்த்துக்கொள்கிறேன்,
உன்
நினைவுகளில்...
என் பித்தம் தெளிய உன் போதை வேண்டும்...
ஈரத்தை,
இன்னும் இன்னும்
ஈரம் ஆக்கினாய் முத்ததின் வாயிலாக...
உன் கன்னத்தில் தர வேண்டிய முத்தத்தை யாவும்
நழுவி இதழ்களில் விழ வைத்ததில் இருக்கிறது உன் திறமை..
கண்ணாடியில்
உன் முகம் பார்பதை விட,
என் கண்ணகளில்
பார் மிகவும் அழகாய் தெரிவாய்..
காதல் பெருகி
கட்டிலில் விழுந்தவுடன் காமம் ஆகிவிடுகிறது...
உன்னை நேசிப்பது என் தேவைகளில் ஒன்று..
எரிக்க
முடியாத நினைவுகளும், புதைக்க முடியாத கனவுகளும் உன்னுடையது..
விரல்களை கோர்த்து
எளிதாய் நுழைகிறான் மனதுள்..
என் உணர்வுகளை
ஊதாங்கோல் வைத்து ஊதுகிறாய்,
உன் கண்கள்
கொண்டு.
பெருமிதம்கொள்ளும் ஆணாதிக்கம்
வெப்பத்தில் வெளியேறி
அனலாய் கனன்று
கொண்டு வருகிறது
பெண்களின் குமுறல்
எத்தனை கைகள்
எத்தனை குறிகள்
பெண்மையை கசக்கி அழவைப்பதை
ஆணாதிக்கத்தின் அழகாக
பார்க்கும் ஆண்களை
என்னவென்று கூறுவது ?
மீண்டும் நீயே..
காற்றில் கரையாத கற்பூரம் ...நீ
விலகாத பனி ..நீ
எழுதாத கவிதை ..நீ
முடியாத முத்தம் ..நீ
உன் அழகு என்னை மாய்த்துவிடுகிறது..
என் எழுத்துக்களாய்
எழுதுகிறேன் நான் கொண்ட அன்பை..
என் எண்ணங்களால் கூட
எழுத முடியவில்லை நீ என் மீது கொண்ட அன்பை..
எதைக்கொண்டும்
என்னை மறைக்க முடியவில்லை
உன் முன்னால்,
முழுவதுமாய் எழுதுகிறாய் என்னை உன் கண்களில்
என் மேல் உன்னை பூசிவிட்டு
யாரை தேடுகிறாய்..
உன்னை விட்டு விலகுவதாக
நினைத்து எனக்கு நானே விலங்கிட்டுக்கொண்டேன்..
மழை நேரத்திலும் வியர்க்கிறேன்
உன் அருகில் இருக்கையில்..
என் போர்வைக்குள் மழையும்,
வெயிலையும் தருபவன் நீ!
தேனீரோ , தேனோ எதுவுமே உன் முத்த அளவில் இனிப்பில்லை..
என் அனர்த்தங்களை அர்த்தம் ஆக்கியது
நீதான்..