நான்
தப்பா எதனா பேசினா மன்னிச்சுருங்க. நீ பேசுறது பூராவும் தப்புதான் மைண்ட் வாய்ஸ் என் கட்டுரையின் இடையில் கேட்கும்.
சொ மன்னிச்சுருங்க.( சோ நெடில் அல்ல சொ குறில்) இது இலக்கணமும் அல்ல ஒரு ஷோவின் பாதிப்பு.
சரி கிளுகிளுப்பான டாப்பிக் எடுத்துட்டு மொக்கையை
போட விரும்பல. உண்மையிலே "மேட்டருக்கு" வருவோம். யாரு சொன்னா செக்ஸ்ன்னா
நாலு சுவருக்குள்ளதான்னு? ஐ மீன் பேசறதுக்கு கூட. யாரு அந்த மகான்? நம்ம கலாச்சாரம் என்னா உள்ளுக்குள்ள என்ன வேணும்னாலும் பண்ணலாம் ஆனா எல்லோர் முன்னாடியும் பேசினா "பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார் செக்ஸ் பற்றி
பேசுவானாம்" என்பதுதான்.முடிந்தவரை அதை இயல்பாக அணுகப்பாருங்க. அது ஒன்றும் கொலைக்குற்றம்
அல்ல கொலைக்குள்ளாக தூண்டும் ஓர் உணர்வு யாரும் தப்பமுடியாது. எனக்கு அப்படியெல்லாம்
இல்லையென்று சொன்னா அது பொய் சொ ரொம்ப மெனக்கிடாதீங்க.
நான் மாத்ருபூதம் ஷோ பார்த்தேன் பழசுதான் ஒரு லெட்டெர்ல
"டாக்டர் என் நண்பனுக்கு அவனோட பிறப்பு உறுப்பு மாறிட்டு வருது இது என்ன நோய்"
அதுக்கு அவர், இவருக்குத்தான் அந்த பிரச்சனை இவர் என்ன நண்பன் குளிக்கும் போது எட்டிப்பார்த்தாரா?
என்றார். இது உனக்கு தேவையா? எப்பதான் பாஸ் எல்லாரும் திருந்துவீங்க? . இப்படித்தான்
குஷ்பு "கல்யாணத்திற்கு முன் உறவு வச்சுக்கலாம்ன்னு" சொன்னதிற்கு உடனே எல்லோரும் கிளம்பி
வந்துட்டாங்க எதிர்க்க "அதெப்படி நடப்பதையெல்லாம் நீ வெளியே சொல்லலாம்".
இதுல என்ன உச்சகட்டம்ன்னா இதோட தாக்கமாக கணவன், மனைவி
கூட இதைப்பற்றி பேசிக்கிறதில்லை என்பதுதான். அதுலையும் என்ன சோகமான விஷயம்னா அது வெளியே
சொல்லமுடியாத பிரச்சனையாம் . வெளியே சொல்றதில்லை என்பதினால்தான் பிரச்சனையே. உங்க கலாச்சார
புத்தகத்தில இருந்து இந்த ஏடை கொஞ்சம் கிழிங்க ப்ளிஸ் கெஞ்சிக்கேட்டுகிறேன்.
" காதலில் விழுந்தவுடன் காமத்தில்
தோய்ந்துவிடுங்கள்
அதுவே காதலிக்க சிறந்த வழி "
இது
வேறுயாரோட கவிதையும் இல்லை. என்னோட சொந்த சரக்குதான். அதுனால காதலை சொல்லுங்க.
.என் ப்ரெண்ட்ஸ்கிட்ட பேசிட்டுயிருக்கப்ப
ஏதோ டாபிக்ல நான் சொன்னேன் "இந்தியாவுல இன்னும் ஃப்ரீசெக்ஸ் வரலன்னு" உடனே
ஒரு மயான அமைதி நான் என்னவோ ஒரு மரண செய்தியை சொன்னா மாதிரி.
அதைப்பற்றி பேசியும், சகஜமாய் அணுகினாலும் ரேப் கொஞ்சம்
குறைய வாய்ப்பிருக்கு. அதை லென்ஸ் வைச்சு பார்த்தா அப்படித்தான் தெரியும். ஜஸ்ட் கூலர்ஸ்
போடுற மாதிரி அதை அணுகுங்க.
"கலவியில் சொல்லாத காதலை
எதில் சொல்வார்கள் சிலர்?"
இது என்னோட ட்வீட்தான். சொ பேசுங்க முதல்ல. அது என்ன
யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு அப்படின்னுதானே கேட்குறீங்க.. நானே பாதிக்கப்பட்டேன்
நேரடியாய் பாதிக்கப்பட்டேன். அதனால, அட்லீஸ்ட் கணவன், மனைவியாவது இயல்பா பேசுங்க பிரச்சனைகள்
குறையும். ஆமேன்.