Thursday, December 18, 2014

பட்டாம்பூச்சியும் , விரல்களும்

ஏதோ பறக்கிறது உள்ளுக்குள்

பட்டாம்பூச்சி இலைகளின் ஊடே

செல்வது போன்ற ஓர் உணர்வு

அதை இரண்டு விரல்கள்

பின்தொடர்வதை போன்று உள்ளது

பிடித்தபின் இளைப்பாறுகிறது

விரல்களும் ,  பட்டாம்பூச்சியும்

துடிதுடிக்க மீண்டும் தொடர்கிறது

பயணத்தை பட்டாம்பூச்சியும் விரல்களும்

வெளியே ஐந்து விரல்களால் தடவியபடியே

ஐந்து மாத கர்பிணி ....