Sunday, June 28, 2015

"பெண்களும் ஃபன்களும்" -- தமிழ் சினிமாவில்



சமீபத்தில் நான் பார்த்த தமிழ் படம் "அனேகன் " அந்த படத்தில் பொண்ணுங்க எல்லோருமே அனேகமா லூசுங்க என்பது மாதிரி "ரொம்ப அழகா காமிச்சிருப்பாங்க" என்ன சொல்ல வராங்க ?

    எத்தனை முறைதான் "சந்தோஷ் சுப்புரமணியம் " ஜெனிலியா மாதிரியான கேரக்டரஸ் பார்க்குறது? சமகாலத்தில் கொஞ்சமே கொஞ்சம் பெண் காதப்பாதிரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்குற ஓர் டைரக்டர்னா அது "செல்வா ராகவன்" மயக்கம் என்ன , 7G , படங்கள்ள பார்க்கலாம். மற்றபடி வர  எல்லாம் 6 பாட்டு , 5 லவ் சீன் ,4 செக்ஸ் சீன் .பொண்ணுங்கன்னா லவ் பண்ணியே ஆகனும்குற மாதிரியும் காட்டுவது .

   அது என்னப்பா பொண்ணுங்க லூசு மாதிரி சுத்திக்கிட்டு , ஹனி , பேபின்னு எதையாவாது உளறிக்கிட்டு இதெல்லாம் சொல்லன்னா லவ்வே பண்ணமுடியாதா? கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத விஷயங்களை பேசிக்கிட்டு இருக்க மாதிரி காட்டுறதுதான் இந்த தமிழ் சினிமா தன் முக்கியமான கடமையாக நினைச்சிருக்காங்க .

    இது என்ன ஆகுதுன்னா "பொண்ணுகன்னா லூசு " என்ற எண்ணமும் இங்க இருக்குற ஆண்கள்ளேல்லாம் தான் ஒரு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இல்லன்னா தாம்சன் ஆல்வா எடிசன் என்ற நினைப்பை உண்டு பண்ணுது. அதுவும் தமிழ் சினிமாவை மட்டும் பார்த்து முடிவுக்கு வருகிற அதிபுத்திசாலி ஆண்களுக்கு.

   தமிழ் சினிமாவில் அதிகம் பெண்கள் கேரக்டருக்கு முக்கியவத்துவம் கொடுத்த ஒரே டைரக்டர்ன்னா  கே . பாலச்சந்தர்தான். அவர் ஓர் பெண்ணுக்கு கொடுக்குற முக்கியத்துவம் , அவளின் உணர்ச்சிகளுக்கும் , அதற்கான நியாயங்களும் ரொம்ப அழுத்தமா சொல்லியிருப்பார் . வசனங்களும் அருமையாக இருக்கும். அதை பார்க்கும்போது 80’s காலேஜ் லைப் நமக்கிடைக்கலையே என்று தோன்றும் .

  அதனால தயவு செய்து இனிமேயாவது இந்த தமிழ் சினிமா பெண்களை குழந்தை மாதிரி காட்டுறேன்னு குரங்கு வித்தை காட்டுவதுபோல் சித்தரிப்பதை நிறுத்தவும் .



பின்குறிப்பு : இதை நான் "அனேகன்" படம் வந்தவுடன் எழுதியது கொஞ்சம் இல்லை ரொம்பவே  லேட்  ஆகிடுச்சு சாரி.