Friday, July 3, 2015

என் சமீபத்திய கீச்சுகள்  


 மரத்தடியில் அமர்ந்து ஓய்வேடுகின்றனர் மரவெட்டிகள் .          

கிடைக்காத முத்தம்போல் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கை .

சிறையில் அகப்பட்ட சிறகுகள் போல் துடிக்கிறது தனிமை என்னிடம் ..

கோடை மழையில் குளித்து சென்றது வெயில்..

அடுத்தவர் : அம்மா வந்துட்டாங்களா ? குழந்தை :தெரில அம்மாவதான் கேட்கனும் #மகளதிகாரம்

மறக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் சரியாக நினைவுக்கு வந்துவிடுகிறது .

நிதானம் மிகவும் நிதானமாய் வருவதில்தான் பிரச்சனையே

நமக்குன்னு வரும் போது அநியாயம் கூட நியாயமா தெரியுது .

சின்னதாய் ஒரு புன்னகையோடு துரிதமாய் கடந்துவிட முடிகிறது வெகு சிலரை ..

பசி நேரத்தில் உணவின் வாசனை தரும் பரவசத்தை தருகிறது இந்த மண் வாசனை .

மிதந்து வரும் காகித கப்பலில் நிஜமாகவே ஏறி செல்கிறது மனம் .

மழையின் காலடி சத்தம் கேட்டு மனம் வானத்தில் பறக்கிறது ..

நேரக்கொடுமை என்பது சமயங்களில் வாட்ச் வொர்க் ஆகாமல் போவதே ..

விளம்பரங்களே நம்மை பொருட்களை வாங்க வலியுறுத்துகிறது , தேவைகள் அல்ல .

உண்மை பொய்யைவிட பயங்கரமானது .

இரவு வழிந்தோடி பகலில் விழுகிறது .

சேர்ந்து ஒரே புள்ளியில் காணாமல் போவதெல்லாம் வாய்க்க பெற்ற வரம் .

கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் கட்டுப்பாட்டை இழந்த பிறகுதான் .

விட்ட இடத்திலிருந்து தொடங்கும் சண்டையும் , காமமும் .

மௌன பெருவெளியில் பேய்த்தனமாய் அலைகிறது மனம் .

கிரிக்கெட் பார்ப்பதும் , சினிமாவை குறை சொல்வதும் நமது கலாச்சாரத்தில் ஒன்றானது .

விரும்புதல் ஓர் புற்று நோய் மாதிரி ஆளை அழித்துக்கொண்டே வரும் .

வெட்கம் மானம் எல்லாம் மனசுக்குத்தான் , உடம்புக்கு இல்ல .

பொய் கலக்காத உண்மை ஏது ?

ஒரு துளி அன்பு போதும் மீண்டும் துளிர்த்து எழ .

நீ மிதந்து என்னை மிதக்க வைப்பதல்லாம் கற்பனை கூட செய்ய முடியாத வரம் # கருவுற்ற தாய்

வாழ்க்கை வெறுப்பை உமிழும்போது எதை கொண்டு துடைப்பது என்றே தெரியவில்லை ..

நேசிப்பு போன்ற கூர்மையான ஆயுதம் வேறில்லை அதிகம் கிடைத்தாலும் , கிடைக்காமல் போனாலும் .

வலியும் சுகமும் காமத்தோடு முடிந்துவிடுகிறது ஆண்களுக்கு ...கருவுற்ற பின்னும் தொடர்கிறது பெண்களுக்கு ..

மறதி என்பது பல நேரங்களில் வசதியாகவே உள்ளது .

போதும் என்பதெல்லாம் உதட்டளவிலே , சாப்பாட்டை தவிர எல்லா விஷயங்களும் .

நமக்கான பிரச்சனைகள் வைடிங்க் லிஸ்ட்ல்ல இருந்து அப்புறம் கன்பார்ம் ஆகிடுது ...

தன்னடக்கம் மாதிரி ஒரு பெருமையான விஷயம் வேறுதுவும் இல்லை..

டௌரியொட இன்னொரு வெர்ஷன்தான் பையன் செட்டில் ஆகிட்டான , பேக் கிரௌண்ட் எப்படி ? வீடு ?

நாமலே காசுக்கொடுத்து நாமலே அடிமையாகவும் , வேலைக்காரியாகவும் இருக்கனும் ..என்னே நம் பாரத திருநாடு # டௌரி

விலகிவிடலாம் என்று நினைத்த உறவு, விலங்காய் மாறும்போது தவித்துதான் போகிறேன் ..

என்னும் எவ்வுளவு நாளைக்குதாண்டா ஆம்பளன்னா தில் வேணும் , பொம்பளன்னா பொறுத்து போனும்ன்னு சொல்வீங்க ..# ச்சை

குழந்தையாய் இருப்பதில் இருக்கும் வசதி யாரு முத்தம் கொடுத்தாலும் தப்பில்லை , யாருக்கு முத்தம் கொடுத்தாலும் தப்பில்லை..;)