என் பொம்மை மகள்
வானவில்லே விரும்பும் வண்ணம் உன் வண்ணம்
மயில் தொகை போன்றதொரு அழகு
எப்பொழுதும் காற்றின் காதுகளை திருகும் உன் கரங்கள்
மலரின் மேன்மையே தோற்றுப்போகும் உன் பரிசத்தில்
இதைவிட மேலான வரத்தை தந்துவிட முடியாது கடவுளால்
ஒருவிதத்தில் இதனாலும் கடவுள் நம்பிக்கை வந்தது எனக்கு...