பழிவாங்கல் ஓர் மிகப்பெரிய நோய்.. ஆனால், நிச்சயம் எல்லோரும் அதை கடந்தே வந்து இருப்போம். சரி அடுத்தவர் போல் நாம் ஏன் திரும்ப நடத்திக்கொள்ள வேண்டும் என்றால் நம் தன்மானம் அதற்கு இடம் தராது. நம்மை வீழ்த்தியவரை எப்படி அவ்வுளவு சுலபமாக எதிர்கொள்ளவது என்று மனசாட்சி என்னும் மிருகம் கேள்வி கேட்கும்.
சரி கழுதை அதையே செய்து தொலைப்போம் என்றால் இரு வேறு மனங்கள் உண்டு அனைவருக்கும் அது அதையும் முழுமையாக செய்யவிடாது. எதோ ஓர் உணர்வை மேல் எழச்செய்யும்.அப்படியும் சில சமயங்களில் பிடிவாதமாக முடித்துவிட செய்வோம் . இன்னும் சில நேரங்களில் வெளியே வர முடியாமல் பழிவாங்கல் என்ற நினைப்பை கைவிடுவோம்.
சாதாரண மனிதனுக்கு இது மிக இயல்பான ஒன்று. ஆனால், ஒவ்வொருவரும் அதனை எப்படி கையாள்கிறோம் என்பதில் ஒளிந்திருக்கறது நம் தன்மை. இறுதில் சொல்ல விழைவது என்னவென்றால் பழிவாங்கல் பாவச்செயல் அல்ல. ஏற்றுக்கொள்ள கூடியதும் அல்ல முடிந்தவரை அதை தவிர்க்கலாம்.