Wednesday, February 26, 2014

இம்மாத கவி தொகுப்பு..

நிரம்பி வழிகிறாய் நீயும் உன் நினைவுகளும்..


மழைக்காலத்தில் 
மழையை விட 
உன் நினைவுகளே 
அதிகம் வருகிறது.

உன் நினைவுகளில்விடவா 
இந்த மழையில் நனைந்துவிடுவேன்!!

மழை வந்து என்  மனதில் 
உன் புழுக்கத்தை உண்டாக்கியது.

மாலை மடியில் 
மழையின் பிடியில் 
ஊஞ்சலாடுகிறேன் 
உன் நினைவில்!!

இதமான பொழுதுகளில்.. 
மிதமான தேனீருடன்..
பருக வேண்டும்..
சுவையான ஓர் முத்தம்!



தீர்ந்து விட்டதாக நினைத்த உன் நினைவுகள் Backup-யில் இருந்து வெளிவருகிறது..

திகைக்கத்தான் செய்கிறேன் 
காமம் விலக்கி நீ 
காதல் செய்கையில் 


நான் - நான் என்றால் 
நீ -நாம் என்றாய் 
நான் -நாம் என்றால் 
நீ -நான் என்றாய் 
கேட்டால் உடனே அவசரமாய் 
நான் என்றால் நீ என்றாய்!!

L-ல்லை  மீறிய நேசம்
O-றவுகளின் தொடக்கம் 
V-ளக்க முடியாத இன்பம் 
E-றக்காத உணர்வு.. simply #LOVE


எனை சூழ்ந்த மேகமாய் உன் கண்கள்.. 
மழையாய் உன் அன்பு..

நனைத்துப்போன மழை உலர்த்திப்போனது 
உன் நினைவுகளில் என்னை !!

என் சாலை எங்கும் உன் நினைவு மரங்கள்..

இறுதியில் உதட்டில் நிற்கும் தேனீர் சுவை போன்றது, 
நீ தரும் முத்தம் !

சேர்த்து வைத்த முத்தம் யாவும் 
நீ வந்தவுடன் செலவழிந்து விடுகிறது..

என்னை தேடி தேடி 
தொலைந்து போன காலமும் உண்டு 
உன்னுடன் இருந்த போது.

புன்னகைக்கிறேன் என்ற பெயரில் 
உன் இரு இதழ்களின் இடையில் பந்தாடுகிறாய்
 எனது உயிரை..

உன் கண்களில் இருக்கும் கவர்ச்சியை 
நிச்சயம்  உன் உடலால் தர இயலாது..


வெட்டப்பட்ட இடத்திலிருந்து துளிர்த்தெழும் மரம்போல், 
நீ முத்தமிட்ட இடத்திலிருந்து மலர்கிறேன்!

உன் பார்வையில் 
எனை பருகும்போது இறுதியில் 
தொக்கிநிற்கிறேன் பால் ஆடையாய்.


என்னிடமிருந்து தப்பி 
எதற்காக என்னுள்ளையே விழுகிறாய்!!

உன்னிடம் விழ்வதும் 
உன்னில் விழ்வதும்
 ஓர் அலாதி எனக்கு.


என் முகம் அறியா உன் முத்தங்களா? 

வெள்ளக்காடாய் என்னுள் வந்து என்னை முழுகவைத்தாய்!!

மனம் தின்னும் கனம் காதல்.

உன் முத்த அச்சில் என்னை எழுதுகிறாய். 

நான் விரும்பும் வேலையில் எல்லாம் உணவளிக்கிறது உன் நினைவுகள்.

என்னை நான் தவறவிட்ட 
இடத்தில் எல்லாம் 
உன்னை நீ நிரப்பிவிட்டாய். 

உன் நினைவுகள் 
ஓர் மழை மாளிகை எனக்கு.

வார்த்தைகளை கொண்டு உன் எதிரே வந்தேன், 
புன்னகையை கொண்டு மௌனம் ஆக்கினாய்.

உனக்காக காத்திருக்கிறது என் தனிமை.

நிலவுக்குள் இரவு உன் கண்கள். 

2 comments: