Friday, October 9, 2015

மௌன வெளிகள் ...

வேண்டும்


காதல்  திகட்ட காமம் வேண்டும் 


மழை தகிக்க உன் தேகம் வேண்டும் 


இரவா பகலா என்று தெரியாத ஓர் பொழுது வேண்டும் 


மயங்கும் என் மதியை எந்த உன் மடி வேண்டும் 


அணைக்க அணைக்க எரிய வேண்டும் 


விலக விலக அணைக்க வேண்டும் 


வேண்டும் என்பதெல்லாம் வேண்டும் உன்னோடு மட்டும் வேண்டும் ....


தொலைந்துபோதல் 


உன்னிடம் இருந்து மறைவதாய்
நினைத்து தொலைந்துப்போனேன் உன்னில் 


எனை தேடும் முயற்சியில்
மீண்டும் மீண்டும் வீழ்ந்தேன்  


கொஞ்சமும் அயராது ஆனால்
வியர்வையுடன் என்னுடன் தேடினாய் நீயும் 


தோற்றுப்போன அசதியுலும்
உன் வெற்றியில் லயித்திருந்தேன்


விழி மூடி 


என் புலன்களை புணர்ந்து
என்னுள் நுழைந்தாய்


எனை  குழைத்து சந்தனமாய்
பூசிக்கொண்டாய் உன்முழுவதும் 


சப்தங்கள் யாவும் நிசப்தத்ததின்
பாதங்களில் உறங்கிகொண்டிருக்க 


எதை  எத்தனித்தாலும் அதைமுடித்து
என்னை பூர்த்தி செய்திருப்பாய் 


கரைந்துவிட்ட என்னை உன்வியர்வை
துளிவழியே தேடுவேன் 


விழிமூடி உயிர் திறந்திருப்பேன்
எனை தாண்டி என் உயிர் தொட்டிருப்பாய்
உன்  விழி திறந்து 


Thursday, October 1, 2015

கீச்சுகளின் தொடர்ச்சி

இரவை தோண்டி எத்தனை பகலில் புதைத்தாலும் மீண்டும் துளிர்த்துவிடுகிறது.

சேர்வது அறியாமல் திகைத்து நிற்கிறது என் கண்கள் உன் முன்னால்.

விழிப்பதிற்கு முன்பே விடிந்து விடுகிறது இந்த உலகம், அனைத்து விஷயங்களிலும் .

நம்மை முழுமையாக புரிந்து கொள்கின்ற ஆத்மாத்தமான உறவே வாழ்க்கை துணையாய் அமைவதெல்லாம் வரம்.


நாம மதிக்க கூடாதென்று நினைக்கிறவங்கதான் பெரும்பாலும் மதிப்புக்குரிய இடத்தில இருக்காங்க.


My name is happy அப்படின்னு என் குழந்தை துணில இருக்கு டிபால்ட்டா .. #:-)

நிறவெறி தாக்குதல் என்பது , இருளில் பாய்ந்து வரும் ஒளி.

தனிமை என்கிட்ட கொஞ்ச நேரம் பேசினப்ப நான் அதுகிட்ட கொஞ்ச நேரம் அழுதேன்..

பாதரசம் பூசப்பட்ட கண்ணாடிப்போல் மோதுகின்றன உன் பின்பம் என் மேல்.

என் இன்பத்தின் தலைநகரம் அவள்.#மகளதிகாரம்

காற்றில் கைகளை அசைத்து என் உயிரை உருவுகிறாள் #மகளதிகாரம்

தன் நிறமறியா வானவில் அவள் #மகளதிகாரம்

உன்னைவிட அதிகமாய் கட்டி பிடித்து உருளுகிறது உன் நினைவுகள்.

குழந்தை பிறந்த முதல் மூன்று வருடத்தில் தரும் இன்பத்தை வேறு எப்பொழுதும் தரயியலாது.


விருந்தும் மருந்தும் கொஞ்ச நாளைக்குதான் #புதுகல்யானம்


மடியென்றாலே சுகம் அதுவும் அன்னை மடியென்றால் வரம்..

எவ்வுளவு நேரம்தான் பபுள்கம் போல மென்னுகிட்டே இருக்கிறது இந்த வாழ்க்கைய ..

படிச்ச மேனிக்கு தெரிகிறார்கள் சில அறிவாளிகள் ..

ஜென்னலொர கவிதைகள் சில பெண்கள்..பேருந்தில்

கேட்பதும் கொடுப்பதுமாய் முடிந்துவிடுகிறது வாழ்க்கை.

பரிதவிப்பு , பரவசம் இரண்டையும் அடைவது காதல் தரும் காமத்தில்..
                                                    

முட்டாள் தனமான வாழ்க்கைக்கு மரணம் வந்து பாடம் புகட்டுது..

சாய்ந்து அழுவதற்கேனும் நமக்காய் ஒரு தோள் தேவைப்படுகிறது.

நான் எத்தனைக்கும் பொழுது நீ அதனை முடித்திருப்பாய் ...அதுவே புரிதல்

என் அனைத்து தேவைகளும் ஒன்றில் பூர்த்தி ஆவதுப்போல் பிறந்தால் என்மகள். #மகளதிகராம்

சென்னையில் ஒவ்வொரு ஸ்டாப்பிற்கும் டாஸ்மாக் வைத்திருக்கும் அரசாங்கம் கூடிய சீக்கிரத்தில் டோர் டெலிவரி பண்ணாலும் ஆச்சரியபட இல்லை.

விடை இல்லாத வினாக்கள் வாழ்க்கை முழுவதும் இருந்துக்கொண்டே இருக்கிறது.


ஒரு சில முத்தம் பித்து பிடித்துஅதன் ஆதியை தேட சொல்கிறது.