Friday, October 9, 2015

மௌன வெளிகள் ...

வேண்டும்


காதல்  திகட்ட காமம் வேண்டும் 


மழை தகிக்க உன் தேகம் வேண்டும் 


இரவா பகலா என்று தெரியாத ஓர் பொழுது வேண்டும் 


மயங்கும் என் மதியை எந்த உன் மடி வேண்டும் 


அணைக்க அணைக்க எரிய வேண்டும் 


விலக விலக அணைக்க வேண்டும் 


வேண்டும் என்பதெல்லாம் வேண்டும் உன்னோடு மட்டும் வேண்டும் ....


தொலைந்துபோதல் 


உன்னிடம் இருந்து மறைவதாய்
நினைத்து தொலைந்துப்போனேன் உன்னில் 


எனை தேடும் முயற்சியில்
மீண்டும் மீண்டும் வீழ்ந்தேன்  


கொஞ்சமும் அயராது ஆனால்
வியர்வையுடன் என்னுடன் தேடினாய் நீயும் 


தோற்றுப்போன அசதியுலும்
உன் வெற்றியில் லயித்திருந்தேன்


விழி மூடி 


என் புலன்களை புணர்ந்து
என்னுள் நுழைந்தாய்


எனை  குழைத்து சந்தனமாய்
பூசிக்கொண்டாய் உன்முழுவதும் 


சப்தங்கள் யாவும் நிசப்தத்ததின்
பாதங்களில் உறங்கிகொண்டிருக்க 


எதை  எத்தனித்தாலும் அதைமுடித்து
என்னை பூர்த்தி செய்திருப்பாய் 


கரைந்துவிட்ட என்னை உன்வியர்வை
துளிவழியே தேடுவேன் 


விழிமூடி உயிர் திறந்திருப்பேன்
எனை தாண்டி என் உயிர் தொட்டிருப்பாய்
உன்  விழி திறந்து 


4 comments: