நீண்ட நாள் உறவின் சாய்யலாக
தங்கிப்போன நினைவுகள்
என்னை ஆழம்பார்த்து சிரிக்கிறது
ஏதோ ஒன்றை இழந்திருப்பதை அறிந்து
பரிகாசிக்கிறது..
விலகியுள்ளது பெருமிதம் தருவதாக நினைத்தேன்
சிறிதும், பெரிதுமான உடைந்துதான் போனேன்
எப்படியாவது தொடர்புக்கொண்டு
என்னை தொட்டுவிட முயற்சித்தேன்
முடியாமல் முகிலாக கலைகிறேன்
புலப்படாத பொழுதுகளில்.
வெளிர் நிற இரவு
வெளிர் நிற இரவு
அதில் பனியாக வந்தமர்கிறது உன்
நினைவுகள் என் மேல்
மிகவும் அடர்த்தியாக
என்னை நனைத்து செல்லும்
சில வேலைகளில்
மறைக்கப்பட்ட இடங்களில்
வெளிர் நிற இரவு
தந்து செல்லும் தனிமையின்
தாக்கத்தையும்
உனக்கான ஏக்கத்தையும்
நான் கரையும் நேரத்தில் வெளிர் நிறம்
வெண்மையான பகலாக மாறியிருக்கும்.
அருமை! புலப்படாத பொழுதுகள் தனிமையில் மட்டுமே தன்னை வெளிக்காட்டி கொள்ளும் அல்லவா...
ReplyDeleteNandri..
Deleteஅருமை! புலப்படாத பொழுதுகள் தனிமையில் மட்டுமே தன்னை வெளிக்காட்டி கொள்ளும் அல்லவா...
ReplyDeleteGood one
ReplyDeleteThanks..
ReplyDeleteUnsaid truth
ReplyDelete