Sunday, January 19, 2014

என் சிறந்த கீச்சுகளாய் நான் கருதுவது..

தொகுப்பு -1

எல்லோருக்கும் எதிர் காலம் ஓர் சொப்பன சுந்தரியே. ;-)

வழி மறந்த(மறைந்த) பாதை. #காடுகள்

முத்தம்தான் சிறந்த அன்புப்பரிசாக இருக்க முடியும்.

வாழ்க்கையின் பின்குறிப்பு மரணம்.

தன் மோகம் கொண்டது ஆசை.

எழுத்துக்களில் முழ்கி போகையில் சில நேரம் பக்கங்களில் என்னை தேடுகிறேன்.

நிதர்சனத்தின் பாயை விரித்து லேசாக அமர்கிறது மரணம்.

விடுதலை தேடாத உணர்வு அன்பு மட்டுமே.

வாழ்க்கையின் இத்தியாதி இத்தியாதி பக்கங்களை அதிகம் நிரப்புவது அன்பே.

முடியாத உரையாடல் பெண்.

நம்மொடு முடிவதில்லை நம் தவறுகள்.

வரங்களிலே வாழ்ந்து முடிப்பது ஓர் சாபம்.

வேதங்கள் யாவும் பசிக்கு அப்பாற்பட்டது.

வாங்கி வைத்த புத்தகத்தின் புழுக்கம் தீர அதை பிரித்து படியுங்கள்.

முப்பொழுதும் உன் விற்பனைகள் -விலைமகள்.

தவிர்க முடியாத பொய், காலம்.

அம்மாவின் அழகு அவள் அன்பிலே அடங்கிவிடுகிறது.

சில விஷயங்கள் புரியும் போது நாம் அதை விட்டு வெகுதூரம் வந்துவிட்டிருப்போம்.

ஒருக்காலும் பொறுக்காது காலம். ;-)

விடியாத இரவுக்குள் தலைவைத்துப் படுக்க ஆசை. #மரணம்

எழுத்துகளில் சிறைப்படுவது ஓர் அலாதி.

எரிந்த தீயின் சாம்பலாய், நாட்களின் நினைவுகள் நம்மிடம்.

நியாயம் என்பது நபர்களுக்கு நபர் வேறுப்படும்.

பிடிப்பதை ஒப்புக்கொள்வதில் கூட இங்கு நிறைய சிரமம் உள்ளது

அழகை தீர்மானிப்பது கண்கள் அல்ல எண்ணங்கள்.

இயலாமையும், இல்லாமையும் சேர்ந்து வந்தால் நடுங்கிவிடுறோம்.

நம்மை தொலைத்து தொலைத்து தேடிக்கொண்டே இருப்பது கலவி.

எறும்பை போல் வரும் முத்தமும் ஒன்றன் பின் ஒன்றாக.

பொறுமையாக இருக்க முயற்சியை விட பயிற்சிதான் தேவை.

எத்தனித்த வார்த்தைகள் யாவும் மாத்திரையாக முழுங்குகிறேன் உன் முன்னே.

தேடுவது கிடைப்பதில்லை மாறாக தொலைத்தது கிடைத்துவிடுகிறது பல நேரங்களில்.

குழந்தையின் உலகத்தில் அன்பானவர்கள் யாவும் அழகானவர்கள்.

ஷு ,துணிகளில் தொடங்கி ப்ராண்ட் பித்து இட்லி, தோசை வரை வந்துவிட்டது. #சரவணபவன்

எப்பொழுதுமே அடம் பிடிக்கும் குழந்தை மனம்.

தோல்வி ஊக்க மருந்து, வெற்றி போதை மருந்து.

பாரமில்லா மனம் ஓர் மரம் அல்லது வரம்.

வாழ்க்கை நம்மை துரத்தவில்லை நாம்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நினைவு தெரிந்தவரை நினைவுகள் அழிவதில்லை.

என் இரவுகளை கண்ணீருக்கு தின்னக்கொடுத்துவிட்டு அமைதியாக அமர்திருந்தேன். #முதிர்க்கன்னி

நடைப்பாதை கடைகள் போல இந்த கனவுகள்.

கோயிலில் ஏற்றப்படும் தீபங்களில் எரிந்துக்கொண்டிருக்கிறது அவர் அவர்களுக்கான ஆசைகள்.

ஒழுக்கம், நேர்மை, தர்மம் எல்லாம் பசிக்குப்பிறகுதான்.

மூடநம்பிக்கையின் மொத்த வடிவமாக வந்து அமர்கிறார் கடவுள்..

எதுவுமே தேடும்போது கிடைப்பதில்லை..பொருட்கள் இருந்து அன்பு வரை..

காதலுக்கு எந்த கருத்தடையும் கிடையாது.

ஓழுக்கம் கெட்ட வெட்கம் ஆனா ஊனா வந்துவிடுகிறது.

தைரியம் பயந்தே வரும்; பயம் தைரியமாக வரும்.

மளிகைகடையில் விலைகேட்டு பொருள்வாங்கினால் மிடில்கிளாஸ்,வாங்கிவிட்டு விலைகேட்டால் அப்பர்மிடில்கிளாஸ், விலையேகேட்காமல் வாங்கிசென்றால் ஹைகிளாஸ்

வாழ்க்கைக்கு எந்த வாய்ப்பாட்டும் இல்லை.

கவனத்தோடு சிதறுகிறேன்.

பாவமும், பரிகாரமும் ஒன்றுதான் காதலில்.

மனிதனின் புலம்பல்தான் கடவுளை அவதரித்தது.

இந்த சோகத்தை எவ்வுளவு புதைத்தாலும் தீடிரன மம்மியாக பின்தொடருகிறது பின்னாளில்.

வாய்ப்புகள்தான் வரம்.

அழுது தீர்ந்த கண்களில் தேங்கி நிற்கிறது வெறுமை.

மனம் ஒரு வானாந்திரம் அதில் பட்சிகள் பறந்துக்கொண்டே இருக்கும்.

தாம்பத்தியத்தின் விளம்பரம்தான் குழந்தைகள்.

வார்த்தையின் பாரம் தாங்காமல் மௌனத்தில் விழவேண்டியுள்ளது சிலசமயம்.

சில நேரங்களில் கெஞ்சும் மனதிடம் அறிவு குழையும்.

அணைக்க அணைக்க எரிந்துக்கொண்டே போகும் காமத்தீ..

நாம் அடுத்தவருக்கு விட நம் மனசாட்சிக்கே அதிகம் துரோகம் செய்திருப்போம்.

தோற்றுப்போகாத துறவரம்தான் கல்யாணம்.

தேடி பிடித்து பரஸ்பரம் கொள்கிறது உதடுகள். #முத்தம்

நிழலை தேடி அலைகிறது கோடையில் மரங்களும்.

முன்னால் காதலியை கணவனுடன் பார்ப்பதும் கையறு நிலைதான்!!

மனம் தின்னும் மகிழ்ச்சி  காதல்.

உண்மையை முகத்தில் அப்பிக்கொண்டு பொய் சொல்ல முயற்சிப்பவர்களும் குழந்தையே..

முடிவை தேடும் முயற்சிதான் தொடக்கமும்..

தேடியும் கிடைக்காத வார்த்தைகள் மௌனத்தில் புதைந்துள்ளது.

உளியில் செதுக்கப்படாத சிலைகள் பெண்கள்.. ;-))

காரணங்களை எல்லாம் கழட்டி எறிந்து விட்டு நிர்வாணமாய் நிற்கிறது சில உணர்வுகள்.

வெற்றி பெறாத கனவுகள் 
என்றுமே நிலுவையில்..

சிறகுள்ள போதே பறந்துவிடுங்கள்..

சில நேரம் கலவியின் சிற்றுண்டி முத்தம்.  ;-)

கலவிக்கு காதல் ஒரு சரியான யுக்தி.

இந்த கலி யுகத்தில் அன்பை கூட ஸ்பூன் பீட் செய்கிறார்கள் குழந்தைகளுக்கு.

ஆணின் பேராசையே பெண்தான்..;-)

உணர்ச்சிகளின் ஊடாட்டல் காதல்.

அதிக இனவிருத்தி ஆற்றலை கொண்டது ஆசைகள்.

என்னை துரத்துவது எதிரிகள் அல்ல என் நியாயங்கள்.

களைத்துப்போன பொய் உண்மையிடம்தான் ஓய்வேடுக்க வரவேண்டும்.

ஆடையை விடுத்து வெட்கத்தை உடுத்திக்கொள்கிறது. # கலவி

ஆனந்த ஆட்க்கொல்லி காதல்.

தண்டணையை ஏற்க துணிந்தவர்களே குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.

தொகுப்பு - 2


ஃபேனிசம் என்றால் பெண்கள் வேலைக்கு போவது என்று நினைகின்றனர் உண்மையில் ஃபேனிசம் என்றால்  ஓர்  பெண் அவளுக்கு பிடித்ததை சுதந்திரமாய் செய்வதே.

சரக்கை விட சரியான மிக்சிங்கில் வருவது  வாழ்க்கையின்  இன்பமும், துன்பமும்.

நிரந்தர தீர்வு என்று ஒன்று இல்லவே இல்லை.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை காக்கைகளுக்கு மட்டுமே.

உண்மைக்கு அருகில் இருப்பது பொய்யே.

போர்வைகள் சில நேரங்களிலே போர்த்த பயன்படுகிறது, பல நேரங்களில் அழுகையும், சிரிப்பையும் தன்னுள் அடக்கிக்கொள்கிறது.

எப்பவும் எதையும் எதிர்நோக்கி துணிந்தே நிற்கிறது மனம், நாம்தான் பயந்து விடுகிறோம்.

என் தொண்டையில் அங்கபிரதஷனம் செய்த வார்த்தைகள் வரிசையில் வந்து நிற்கிறது கவிதையாய் காகிதத்தில்.

இப்போதெல்லாம் இயல்பை கூட வர வைக்கிறார்கள்.

கனவுகளை பொய் ஆக்குவதே நிஜத்தின் வேலை.

முத்தத்தில் சறுக்கினால் மொத்தமாய் விழுந்துதான் ஆகவேண்டும் காமத்தில்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீண்ணடித்து விடுகிறோம்.

வாழ்க்கைக்கு மட்டும் எந்த விளம்பர இடைவேளையும் இல்லை.

என் விதிகள் சில சமயம் எனக்கே அப்பாற்பட்டு இருக்கிறது.


தொகுப்பு - 3


கனவுக்கண்டு காத்திருந்த நாட்கள் எல்லாம் கனவாய் போனது..#முதிர்க்கன்னி

விரும்பும், வெறுப்புகள் அதிகமாய் உள்ளன.

நினைவுகள் சுலபமாய் கடத்தி விடுகிறது நிகழ்காலத்தை.

எரிவதற்கு முன்பே சாம்பல் ஆகிவிடுகிறது மனம் பல நேரங்களில்.

எதிர்பார்ப்புகள் எதிர்வினைகளே கொண்டுவருகிறது.

விடியாத இரவு. #முதிர்கன்னி

மூச்சில் முடிந்துவைத்துள்ளது இந்த காற்று நம்மை.

எவ்வுளவு நடந்தாலும் காலத்தின் கால்கள் வலிப்பதேயில்லை.

"நான் ராமன்" என்று சொல்பவர்களுக்கு ஓர் குறிப்பு கிருஷ்ணரும், ராமனும் ஒன்றே.

தேர்ந்தெடுப்புகள் சாத்தியமாவதில்லை அனைத்திலும்.

சில நேரங்களில் நம் வாழ்க்கைக்கு நாமே பார்வையாளராய் இருப்பது நலம்.

கூடி வாழ்த்தால் "கோடி" நன்மை #அரசியல்.

காலத்தின் புனைப்பெயர் மாற்றம்.

நம் தேவைகள் தீரும்போது நாம் இறந்திருப்போம்.

சரியாய் சொன்னால் வாழ்வதில் குற்றமில்லை வாழ்க்கைதான் குற்றம்.

அழகை ரசித்தால் மட்டுமே கூடும்.

"எதிர்கால கனவுகள்" என்பது பிழை..கனவுகள் என்றாலே எதிர்காலம்  தானே?

காலத்திற்கு செவி திறன் கிடையாது எதையும் காதில் வாங்காமல் எளிதாய் கடந்து விடுகிறது.

நம் மனசாட்சிதான் நம் முதல் விமர்சகர்.

அடுத்தவரிடம் ஏமாற்றம் அடைந்தால் முட்டாள், அடுத்தவரை ஏமாற்றினால் புத்திசாலி என்னே உலகம் !

இரவு அயர்ந்து உறங்க  சென்று விடுகிறது விடியலின் போது.

மௌனம் ஓயாமல் பேசும் போது வார்த்தைகளால் எதிர்க்கொள்ளவே முடியாது.

எதிர் காலம் ஒரு பிளங் பேப்பர் அதுலே என்ன வேணும்னாலும் நிரப்பப்படலாம்.

தினமும் மாறு வேட போட்டி உண்டு மனங்களுக்கு.

ஞாபகங்கள் மறக்க முடிவதில்லை மறையவே செய்கின்றன.

அவர் அவருக்கு என தனி விதிகள் உண்டு அதன் பொது விதி விருப்பம்.

புனையப்பட்ட சித்திரமாய் நகர்கிறது வாழ்க்கை.

தத்துவங்கள் சொல்ல ஞானியாக இருக்க வேண்டியதில்லை வாழ்ந்தாலே போதும்.

உறங்க தேவை சில கனவுகள்.

எனக்காய் காத்திருக்கிறது என் பொறுமை.

மறைக்க மறைக்க வெளிப்பட்டுக்கொண்டே வரும் காதலும், காமமும்.

தீர்மானங்கள் யாவும் சூழ்நிலைகளால் முடிவு செய்யப்பட்டது.

மதம் பிடித்த யானைகளை விட, ஆட்டு மந்தைகளே அதிகம் நம் நாட்டில்.

அறிவீனங்களில் ஒன்று அறிவு.

எதிர்ப்பார்ப்பதை விட அதிகமா வருகிறது துன்பம் வெயிலை போல.

நிஜங்களின் பயணம் இறுதியில் கனவிடமே கொண்டு சேர்க்கிறது.

கடவுளும் கந்தசாமியும் கதையில் வருவதுப்போல் கடவுள் வரம் கொடுக்கவே லாயக்கு வாழ்வதற்கு தகுதி இல்லாதவர்.

தொலைந்து  போன நினைவுகள்தான் மறதி.

நிசப்தம் அதிக சத்தமிடுகிறது உள்ளுக்குள். #தனிமை

காமத்தின் எச்சில் படாமல் காதலை சுவைக்க முடியாது.

பயம் மட்டும் துணிந்து வந்துவிடுகிறது.

குற்றவாளிகள் உண்மையில் சூழ்நிலைகளால் தண்டிக்கப்பட்டவர்கள்.

போக்கிடம் இல்லாத மனம் திரும்பி வந்து என்னிடமே புலம்புகிறது.

திரை விலகாத திரை ஏது?

காக்கை வீட்டு வாசலில் கத்தினால் விருந்தாளிகள் வருவதில்லை, எனில் காக்கைகளே விருந்தாளிகள்தான்.

அன்புக்கு பயந்து அடங்கி போனவர்களில் நானும் ஒருவள்.

ஓர் ஆணின் ரசனையை அவன் ரசிக்கும் பெண்ணை கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

அன்பில் பிறக்கும் முதல் குழந்தை முத்தமே.

தத்துவங்கள் அனுபவங்களின் சூளுரை.

நம்மை அழித்துக்கொள்ள நம்மிடமே இருக்கும் ஒரே ஆயுதம் நம் எண்ணங்கள்.

காற்றைப்போல் காதலிக்க முடியாது எந்த நேரமும் தான் விரும்புவதை தழுவிக்கொண்டே இருக்கிறது.

கனவுகளின் எச்சம் இந்த வாழ்க்கை.

மனம் ஓர் பொதி சுமக்கும் கழுதை.

பிழைக்க தெரியாத உண்மை பொய்யிடம் சிக்கிக்கொள்கிறது.

தவறுகள் குறுக்கே நிற்கவில்லை என்றால் சரிகளின் அட்டகாசம் தாங்கியிருக்க முடியாது.

மனம் ஓர் விடுதலை விரும்பி  காலம் ஓர் சிறைக்காவலர்..

கூட்டத்தின் சாராம்சம் ஏமாறுவதே.

விலகுவதும் , விரும்புவதும் நம்மிடமில்லை.

தன் அடக்கத்திற்கு சுய பிரகடனம் உண்டு.

நாளடைவில் தேய்வதேயில்லை நாட்கள் மட்டும்.

துன்பங்கள் ஓய்வேடுக்க சிறிது  இன்பத்தை தந்து செல்கிறது.

பட்டாம்பூச்சியை பிடிக்க நினைக்கும் ஒருவருக்கும் சுதந்திரத்தை பற்றி பேச தகுதியில்லை.

நடப்புல காதல ஒளிச்சு வைக்கறதும்... காதல்ல நட்ப தேடுவதும் சுவாரசியம்.

நேரம் தவறாமல் கடந்துவிடுகிறது நேரம்.

மதவா(வியா)திகள்.

அன்பின் மொழிப்பெயர்ப்பு முத்தம்.

எழுத்துகளில் விழும்போது பக்கங்களில் அடிப்படுகிறது.

கடமை நம்மை அழைப்பதில்லை நிர்பந்திக்கிறது.





கவிதைகள் ..

மெய் தேடல் 


என்னுள் இறங்கிவிட்டாய் ஏறுவதற்கு ஏன் தயக்கம்..

மூங்கிலில் ஓடும் நீர்ப்போல் ஓடுகிறாய் நீ என்னுள்..

கடினங்களை கடப்பது என்றால் அப்படி ஒரு சுகம் உனக்கு.. 

பள்ளத்தில் புதைந்துபோகவே விரும்புகிறாய்  நானும் 
அதையே விரும்புகிறேன்.. 

கண்டபடி ரசிக்கிறாய் நானோ கண்கள் மூடியபடி 
அதை அனுபவிக்கிறேன்..

எங்கோ தொலைத்துவிட்டு எங்கோ தேடுகிறாய் உயிரை!!


நினைவுகள் 


ஈர துணியால் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது 

உன் நினைவுகள் 

நினைத்தாலும் எரிக்க முடியாது..




உன் நினைவுகள்

வேரூன்ற 

கிளைகளாய் பரவுகிறாய் 


என்னுள்.

மழையும் நீயும்..




மழை உன் நினைவு குடைப்பிடித்தது எனக்கு.

மழையில் நனைவதும் உன்னில் நனைவதும் வேறில்லை எனக்கு.

மழை தரும் உன் நினைவின் குளுமையை.

மழை நின்ற பின்
இலைகளிலிருந்து சிந்தும்
மழைத்துளியாய் சில்லிடுகிறாய்
நீ என்னுள்.



நேசத்தின் மிச்சம்..




என் முத்ததிற்கான சரியான அரியணை உன் இதழ்களே.

புதைக்கத்தான் செய்கிறேன் உன் நினைவுகளை என்னுள்,
அதன் காரணமாய் வளரவே செய்கிறாய்
 நீ என்னுள்.

முத்தத்தில் தோய்த்து வெப்பத்தில் வெளியிடுகிறாய் என்னை.

என்னையே உட்கொள்கிறது உன் நினைவு மாத்திரை.

"பிடித்து"ப்போன பித்து நீ!

என் உள்ளுணர்ச்சிகளின் தீவிரம் புரிந்தது உன்னால்.

தான் உருகி காணாமல் போனாலும் சரி என்று,
தீயை காதலிக்கும்
மெழுகைப்போல்
உன்னை காதலிக்கிறேன்.

என் தவறுகளின்,
சரி நீ!

ஏதும் அற்ற இரவில் உன் நினைவுகளே என் போர்வையாய்...

உனக்காய் தனித்திருக்கும் போது, பொழுதுகளும் தவித்திருக்கும்.

உன்னுள் நீந்தி உன் நினைவுகளில் வெளியேறுகிறேன்.

விடிந்தும் மறையாத நிலவு உன் கண்கள்.

என் கனவுகளை தீர்க்க வல்லது உன் நிஜங்கள்.

உன் மடியில் உறங்கும் சுகம்,
உன் நினைவில் நீடிப்பது .

என் ஈர கூந்தலில்..
விரல்கள் நுழைத்து..
எரியவிடுவாய்..
என்னை முத்தத்தில்.

ஓயாமல் கேட்கிறது உன் சத்தம் என்னுள்.

நீ பெறாமல் போன முத்தங்கள் யாவும் காற்றில் அலைந்து திரிகிறது உன் இதழ்களை தேடி.

என் கண்களிலிருந்து கலையாத கனவுகளாய் நீ.

விடியற்காலை குளிரில்
விரல்கள் போர்வையை தேடுவதுப்போல்
உன்னை தேடுகிறது என் மனம்.

உன்னுடன் பயணிப்பது ஓர் சுகம்,
உன் மீது பயணிப்பது ஓர் சுகம்
 நினைவுகளாய்..



காதல் கீச்சுகள்..


சேர்த்து வைத்த வெட்கம் எல்லாம் உன்னை கண்டவுடன் ஒன்று கூடி மொத்தமாய் உடைந்து விடுகிறது.

என் ஞாபகத்தில் திரும்ப திரும்ப வேதாளமாய் வந்து ஏறுகிறது உன் நினைவுகள்...

குளுரும் கத கதக்கிறது உன்னால் என்னைப்போல்..

உன்முன் மறைகிறேன் என்று தொலைந்து விட்டேன் உன்னில்..

எனை வேண்டி உன்னிடம் நிற்கிறேன்..

உன் அன்பில் ஜாம்முன்னாக 
ஊறுகிறேன் இறுதியில் 
எடுத்து விழுங்கியே விடுகிறாய்..# ;)

நிலைக்கண்ணாடி  
நிலைக்கொத்தி நிற்கிறது  
உன் அழகில்..

என் கோபத்தை  
வழி மறிக்கிறது  
உன் புன்னகை..

உன் அகத்தினால் உன் புறம் தேடுகிறேன்..

பாரா முகம் காட்டியது  
என் கோபம்  
உன் முகம் பார்க்கையில்.

அணைந்த விளக்கு  
எரியும் தீபம்  
கலவி.

கிறுக்காமல் போன எழுத்துகளில்தான் உன் அன்பு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

உன் அறிவு என்னை முட்டாள் ஆக்குகிறது.

என் தனிமையும் வெட்கத்தை உடுத்தியது உன்னால்.

எரியாமல் போன ஈர விறகாய் உன் நினைவுகள் என் நெஞ்சில்..

எத்தனை பேனாக்களின் மை தீர்ந்தாலும் 
உன் மெய் பற்றி எழுதி முடியவில்லை..

எரியும் தருவாயில் இருக்கும் என்னை எரிக்காமல் உருகவிடுவாய் நீ!

என் எண்ண ஓட்டங்களில் தொய்ந்து நிற்கிறது உன் நினைவுகள்.

என் நிசப்தத்தில் பேரொளியை எழுப்புகிறது உன் தடங்கள்..

உன்னை கொண்டு என்னை நிரப்புகிறாய்.

உன் கண்களில் பயணம் செய்து என் கனவுகளில் மிதக்கிறேன்.

நெருப்பாய் பரவுகிறாய் என்னுள் நீ.

மறந்து போய் என் ஞாபகத்தில் தங்கிவிட்டது உன் நினைவுகள் யாவும்..

கேள்வியும் விடையுமாய் உன் மௌனம்.

நிலைக்கொள்ள முடியவில்லை நிலைக்கண்ணாடியில் எனக்கு பதிலாய் உன் பின்பம்.

கிச்சு கிச்சு மூட்டும் உண்மைகளில் உன் அன்பும் ஒன்று.

என்னையே தொலைத்த பின்தான் உன்னை கண்டுப்பிடிக்க முடிந்தது.

என்னை விழுங்கும் வேட்கை குறைவதேயில்லை உன் கண்களுக்கு.





பிடிவாதமாய் பிடித்துபோனவை 



எனக்கு பிடித்த விஷயங்களை உங்களுடன் பரிமாறுகிறேன்...


அழுதுக்கொண்டே அடித்த அம்மாவையே கட்டிக்கொள்ளும் 
குழந்தை..

எதுகை மோனையுடன் நக்கலடிக்கும் நண்பர்..

எதையும் எதிர் பார்க்காமல் அடுத்தவருக்கு உதவி செய்யும் யாரோ ஒருவர்..

நம்மை பார்த்து ஓடி ஒளியும் அணில்..

தனக்கு என்று எதையும் யோசிக்காத அம்மா..

யாரோடும் சேர்ந்து நின்றுவிடாத  காலம்...

என்றும் ஒற்றையாய் அல்லாடும் மனம்..

சிக்காத வண்ணத்து பூச்சி..

காதல் திகட்ட காமம்..

வெயில் தரும் வியர்வை ..

மழை தரும் முத்தம்..