மெய் தேடல்
என்னுள் இறங்கிவிட்டாய் ஏறுவதற்கு ஏன் தயக்கம்..
மூங்கிலில் ஓடும் நீர்ப்போல் ஓடுகிறாய் நீ என்னுள்..
கடினங்களை கடப்பது என்றால் அப்படி ஒரு சுகம் உனக்கு..
பள்ளத்தில் புதைந்துபோகவே விரும்புகிறாய் நானும்
அதையே விரும்புகிறேன்..
கண்டபடி ரசிக்கிறாய் நானோ கண்கள் மூடியபடி
அதை அனுபவிக்கி
எங்கோ தொலைத்துவிட்டு எங்கோ தேடுகிறாய் உயிரை!!
நினைவுகள்
ஈர துணியால் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது
உன் நினைவுகள்
நினைத்தாலும் எரிக்க முடியாது..
உன் நினைவுகள்
வேரூன்ற
கிளைகளாய் பரவுகிறாய்
என்னுள்.
உன் நினைவுகள்
வேரூன்ற
கிளைகளாய் பரவுகிறாய்
என்னுள்.
மழையும் நீயும்..
மழை உன் நினைவு குடைப்பிடித்தது எனக்கு.
மழையில் நனைவதும் உன்னில் நனைவதும் வேறில்லை எனக்கு.
மழை தரும் உன் நினைவின் குளுமையை.
மழை நின்ற பின்
இலைகளிலிருந்து சிந்தும்
மழைத்துளியாய் சில்லிடுகிறாய்
நீ என்னுள்.
நேசத்தின் மிச்சம்..
என் முத்ததிற்கான சரியான அரியணை உன் இதழ்களே.
புதைக்கத்தான் செய்கிறேன் உன் நினைவுகளை என்னுள்,
அதன் காரணமாய் வளரவே செய்கிறாய்
நீ என்னுள்.
முத்தத்தில் தோய்த்து வெப்பத்தில் வெளியிடுகிறாய் என்னை.
என்னையே உட்கொள்கிறது உன் நினைவு மாத்திரை.
"பிடித்து"ப்போன பித்து நீ!
என் உள்ளுணர்ச்சிகளின் தீவிரம் புரிந்தது உன்னால்.
தான் உருகி காணாமல் போனாலும் சரி என்று,
தீயை காதலிக்கும்
மெழுகைப்போல்
உன்னை காதலிக்கிறேன்.
என் தவறுகளின்,
சரி நீ!
ஏதும் அற்ற இரவில் உன் நினைவுகளே என் போர்வையாய்...
உனக்காய் தனித்திருக்கும் போது, பொழுதுகளும் தவித்திருக்கும்.
உன்னுள் நீந்தி உன் நினைவுகளில் வெளியேறுகிறேன்.
விடிந்தும் மறையாத நிலவு உன் கண்கள்.
என் கனவுகளை தீர்க்க வல்லது உன் நிஜங்கள்.
உன் மடியில் உறங்கும் சுகம்,
உன் நினைவில் நீடிப்பது .
என் ஈர கூந்தலில்..
விரல்கள் நுழைத்து..
எரியவிடுவாய்..
என்னை முத்தத்தில்.
ஓயாமல் கேட்கிறது உன் சத்தம் என்னுள்.
நீ பெறாமல் போன முத்தங்கள் யாவும் காற்றில் அலைந்து திரிகிறது உன் இதழ்களை தேடி.
என் கண்களிலிருந்து கலையாத கனவுகளாய் நீ.
விடியற்காலை குளிரில்
விரல்கள் போர்வையை தேடுவதுப்போல்
உன்னை தேடுகிறது என் மனம்.
உன்னுடன் பயணிப்பது ஓர் சுகம்,
உன் மீது பயணிப்பது ஓர் சுகம்
நினைவுகளாய்..
காதல் கீச்சுகள்..
சேர்த்து வைத்த வெட்கம் எல்லாம் உன்னை கண்டவுடன் ஒன்று கூடி மொத்தமாய் உடைந்து விடுகிறது.
என் ஞாபகத்தில் திரும்ப திரும்ப வேதாளமாய் வந்து ஏறுகிறது உன் நினைவுகள்...
குளுரும் கத கதக்கிறது உன்னால் என்னைப்போல்..
உன்முன் மறைகிறேன் என்று தொலைந்து விட்டேன் உன்னில்..
எனை வேண்டி உன்னிடம் நிற்கிறேன்..
உன் அன்பில் ஜாம்முன்னாக
ஊறுகிறேன் இறுதியில்
எடுத்து விழுங்கியே விடுகிறாய்..# ;)
நிலைக்கண்ணாடி
நிலைக்கொத்தி நிற்கிறது
உன் அழகில்..
என் கோபத்தை
வழி மறிக்கிறது
உன் புன்னகை..
உன் அகத்தினால் உன் புறம் தேடுகிறேன்..
பாரா முகம் காட்டியது
என் கோபம்
உன் முகம் பார்க்கையில்.
அணைந்த விளக்கு
எரியும் தீபம்
கலவி.
கிறுக்காமல் போன எழுத்துகளில்தான் உன் அன்பு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
உன் அறிவு என்னை முட்டாள் ஆக்குகிறது.
என் தனிமையும் வெட்கத்தை உடுத்தியது உன்னால்.
எரியாமல் போன ஈர விறகாய் உன் நினைவுகள் என் நெஞ்சில்..
எத்தனை பேனாக்களின் மை தீர்ந்தாலும்
உன் மெய் பற்றி எழுதி முடியவில்லை..
எரியும் தருவாயில் இருக்கும் என்னை எரிக்காமல் உருகவிடுவாய் நீ!
என் எண்ண ஓட்டங்களில் தொய்ந்து நிற்கிறது உன் நினைவுகள்.
என் நிசப்தத்தில் பேரொளியை எழுப்புகிறது உன் தடங்கள்..
உன்னை கொண்டு என்னை நிரப்புகிறாய்.
உன் கண்களில் பயணம் செய்து என் கனவுகளில் மிதக்கிறேன்.
நெருப்பாய் பரவுகிறாய் என்னுள் நீ.
மறந்து போய் என் ஞாபகத்தில் தங்கிவிட்டது உன் நினைவுகள் யாவும்..
கேள்வியும் விடையுமாய் உன் மௌனம்.
நிலைக்கொள்ள முடியவில்லை நிலைக்கண்ணாடியில் எனக்கு பதிலாய் உன் பின்பம்.
கிச்சு கிச்சு மூட்டும் உண்மைகளில் உன் அன்பும் ஒன்று.
என்னையே தொலைத்த பின்தான் உன்னை கண்டுப்பிடிக்க முடிந்தது.
என்னை விழுங்கும் வேட்கை குறைவதேயில்லை உன் கண்களுக்கு.


மூங்கிலில் ஓடும் நீர்ப்போல் ஓடுகிறாய் நீ என்னுள்....
ReplyDeleteஉன் அகத்தினால் உன் புறம் தேடுகிறேன். or என் அகத்தினால் உன் புறம் தேடுகிறேன்.
ReplyDeleteMM. SUPER.
ReplyDeleteகடினங்களை கடப்பது என்றால் அப்படி ஒரு சுகம் உனக்கு..
கண்டபடி ரசிக்கிறாய் நானோ கண்கள் மூடியபடி
அதை அனுபவிக்கிறேன்..
SUPER.... ENNENNAVO GNABAGANGAL VANTHU VANTHU POGIRATHU....