தொடாமல் போன
தொட்டச்சிணுங்கியாய் காத்திருந்தேன்..
தொட்டால் வெடித்துவிடும்
நீர்க்குமிழியாய் மிதந்திருந்தேன்..
தொடமுடியாத வானமாய்
வியர்த்து நின்றிருந்தேன்..
இறுதியில்
தொட்டுவிட்டால் ஒட்டிக்கொள்ளும்
வண்ணமாக உன்னருகே வருகிறேன்.
No comments:
Post a Comment