இம்முறை கோடைப்பயணம் செல்ல வாய்ப்புக்கிடைத்தது கொடைக்கானல் மற்றும் மூணார். அதில் ஏற்பட்ட குளுமையான அனுவப்பதிவு. எங்களுக்கு சொந்தமான டஸ்டர் காரை என் கணவரே ஓட்டிச்சென்றார் சென்னையிலிருந்து மூணார் 600km. முன்னதாகவே கொடைக்கானலில் ரூம் புக் செய்துவிட்டோம் எங்களுடன் நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் வந்திருந்தார்.
சென்னையிலிருந்து கொடைக்கானல் 430km என் கணவருக்கு மட்டுமே ட்ரைவ் பண்ண தெரிந்திருந்ததால் அவ்வுளவு தூரம் ஒருவரே ஓட்டுவது என்பது கடினம். ஆகையால், 12/04/17 அன்று மாலை 4.30 மணிப்போல் தொரைப்பக்கம், சென்னையிலிருந்து கிளம்பி திருச்சிக்கு இரவு 10 மணிக்கு சென்று தங்கிவிட்டோம். 1000 ரூபாய் நான்ஏசி ரூம் ஓக்கே நன்றாகத்தான் இருந்தது. காலை 9.30 மணிப்போல் மீண்டும் பயணப்பட்டோம் திண்டுக்கல்லை நெருங்கியவுடன் பதநீர் , கருப்பட்டி டீ , இளநீர் என்று நம் சூழலே மாறியது. கொடைக்கானல் கிழிருந்து மலை ஏறுவதுக்குள்ளான தூரம் 43km.
மலைகளின் இளவரசி கொடைக்கானலை வந்தடைந்தோம் மணி மூன்றாகி இருந்தது சாப்பிட்டுவிட்டு லேக் பார்க்க கிளம்பினோம். சீசன் என்பதால் அதிக கூட்டம். ரம்யமான அழகு நிறைந்திருந்தது எங்கும் மகிழ்ச்சி மேளங்கள் கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு.போட்டிங் முடித்துவிட்டு நேரமிருந்தமையால் சைக்கிள் வாடகைக்கு எடுத்து முழு ஏரியையும் சுற்றினோம் ஒரு மணி நேரத்திற்கு 60 ரூபாய். உண்மையில் ஓர் நல்ல அனுபவம் குளுமையான காற்றுடன் மிதித்துக்கொண்டே செல்வது அற்புதமான உணர்வு.
காலையில் குணா பாறை, பைன் போரெஸ்ட் ,வியூ பாண்ட் போன்ற இடங்களை பார்த்தோம். கொடைக்கானலில் சோலார் அப்சர்வேட்ரி லேப் இருந்தது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டியது.ஹோம் மேட் சாக்லேட்ஸ் இங்கு மிகவும் பிரசித்தி கால் கிலோ 80 ரூபாய் சாக்லேட்ன் விலையும் இனித்தது.வழக்கமான மலைப்பிரதேசம் பழங்கள் கிடைக்கும். குப்பை போன்று பெருக்கிவிட்டது தங்கும்விடுதிகள். வழி எங்கும் கேப்களும், கைட்களும் புகையாக நம் மேல் பரவுகின்றனர். இந்த அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் குறைந்தவர்கள் இல்லை மக்கள் திருந்தவேமாட்டார்கள் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பாட்டிலும் , கவர்களும் மிதக்கின்றன.
14/04/17 அன்று மாலை மூன்று மணிப்போல் மலையிறங்க தொடங்கிவிட்டோம். தேனீயில் ஜூஸ் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்தோம் அடுத்து போடி, போடிநாயக்கனுர் என்று வந்துது போடி கடந்தவுடன் மலை ஏற தொடங்கியாகிவிட்டது 85கிம் மலைப்பிரதேசம்தான் அதுவும் இரவில் பயணித்தது அட்வன்சர் போல்தான் இருந்தது. என் இரண்டு வயது மகளுக்கு கொஞ்சம் முடியாமல் வாந்தி வந்ததால் இன்னும் தாமதமாகத்தான் மூணார் சென்றடைத்தோம். வழியில் ஓர் செச்சி கடையில் அப்பமும் கொண்டக்கடலையும் சாப்பிட்டோம். போடிமெட்டு கேரளாவை சேரும் வழிகளில் சிறு கிராமங்களும் தேயிலை தோட்டமும் காணப்பட்டன. தமிழ்நாட்டு எல்லையை தாண்டினாலும் அங்கங்கே தமிழ் பலகைகள் காணநேரிடுகிறது.
இரவு 10 மணிக்கு மூணார் அடைந்தோம் மூணாரின் மையப்பகுதியிலே சங்கீதா என்ற தமிழ்நாட்டு உணவகம் ஒன்று உள்ளது (நீங்கள் நினைக்கும் சங்கீதா இல்லை) இங்கு நம்மூரில் கிடைக்கும் இட்லி, தோசை கிடைக்கும். சீசனில் 1000 ரூபாgய் ரூமை இரண்டாயிரம் என்று சொல்வதுண்டு அதுப்போல விலைக்கு ஏற்றாற்போல். அதிகம் கலைத்ததால் கொஞ்சம் தாமதமாகத்தான் காலை கார் புக் செய்து கிளம்பினோம்.ஸ்பைசஸ் பிளாண்ட்ஸ் என்று தனியாக தோட்டம் வைத்து உங்களுக்கு இயற்கை மருந்துகளின் பெருமையை சொல்லி முடிந்தவரை உங்களை வாங்கவைப்பர். இயற்கை மருந்து நன்றுதான் அலோபதிக்கு இது ஆயிரம் மடங்கு நன்று ஆனால்,விலை இயற்கை எய்வதுப்போல் உள்ளது என்பது வருந்தத்தக்கது.
யானை சவாரி தவறுதான் இருப்பினும் ஓர் ஆர்வம் காரணமாக சவாரி செய்தோம். உள்ளுக்குள் ஓர் பயம் சீசன் என்பதால் இரண்டு நாட்களாய் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருக்கிறதாம் லைட்டா கோபப்பட்டாக்கூட அவ்வுளவுதான். எங்கும் பணம் வியாபித்து இருக்கு ஒருவருக்கு 400 ரூபாய். அழகான மலைச்சரிவுகள் தேயிலை தோட்டம் படிகள்போல் அமைந்துள்ளதை பார்க்கையில் இறங்கி ஓடவேண்டும் போலுள்ளது.மலையின் உயரம் காண முற்படுகையில் மேகம் மறைக்கும் மோகம் கொண்டு. ஓர் ஜீப் சவாரி கொண்டுசெல்கிறார்கள் காட்டுப்பாதைகளின் ஊடே நீர்வீழ்ச்சி , டேம் என்று கூட்டிசெல்கின்றனர் ஓர் பெரியமுதலை வாயினுள் சென்று வெளிவருவதுப்போல் உள்ளது. தேமேயென்று சில பார்க்குகளும், வியூ பாயிண்ட்களும் இருக்கும். அந்த ஜீப் சவாரிக்கு 4000 ரூபாய் சொல்லி இறுதியில் 3500 ஒப்புக்கொண்டனர். கேப்க்கு 1500 ரூபாயும் 100 டிப்ஸும் .
மீண்டும் சாப்பிட்டுவிட்டு இரவு 7.30 மலையிறங்க தொடங்கினோம் இருக்கவே இருக்கு கூகுள் மேப் அப்படி வரும் போது ஓர் பாதை 15கிம் கிட்ட ஜீப் மட்டும் செல்லக்கூடிய பாதையாக இருந்தது என்ஏஹ்லிருந்து விலகிவந்து மீண்டும் சேர்க்கிறது அப்போது எனக்கு பேஸ்புக்கில் பார்த்த ஓர் புகைப்படம் ஞாபகம் வந்தது கூகுள் மேப் நம்பி சென்றால் மலை முக்கில் கார் நிற்கும். கேட்டால் ஷார்ட்டெஸ்ட் பாத் என்று சொல்லும். போகும்போது எப்படியோ அப்பாதையை தவறி சரியாக சென்றுவிட்டோம். மைனா படம் அங்குதான் எடுத்தது. பரதேசி மூணாரில். எப்படியோ சில ஆயிரங்களை செலவு செய்து குளுமையை அனுபவித்தாகிவிட்டது டீசலுக்கு இணையாக டோல் கட்டணும் எங்கும் கட்டணம் எதிலும் கட்டணம். இந்த வெயிலுக்கு இனிமையான பழசாறு இவ்விடங்கள். நன்றிகள் பல என் கணவருக்கும் டஸ்டருக்கும்.
Nalla story writer.
ReplyDeleteநன்றி..
Delete