Tuesday, April 25, 2017

ஒரு மனதில் இருவர்

அதெப்படி ஒரு பெண் இரண்டு பேரை விரும்ப முடியும் என்பது கேள்வி.

 இப்படி வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஒருவரை விரும்புகிறீர்கள். (இதில் நீங்கள் என்பது  
இருப்பாலரும்) அவரை மணம் முடிக்க முடியாமல் போய்விட்டது. பின் வேறொருவை மணந்து நடைபெறும் வாழ்க்கையில் வாழ்க்கையோடு கலந்தும்(கடந்தும்)விட்ட அவரை நேசிக்காமல் இருக்க முடியாது. அதேப்போல் நாம் ஒருவரோடு வாழ வேண்டும் என்று ஏங்கியவரை வெறுக்க இயலாது. என்றேன்றும் நிலைத்திருக்கும் அக்காதல். இதை ஏற்பவர் சிலர் மறைப்பவர் பலர். காதலித்து மணப்புரிந்தவர்களின் தேர்வும் சமயங்களில் தவறுவதுண்டு அப்பொழுதும் நாம் தவறவிட்ட சில உறவுகளும் உண்டு.

  இதன் புரிதல் இல்லாமல் அதைக் கள்ளக்காதல் என்று பிதற்றுவது காதலைக் கல்லாமையின் விளைவு அது. பொதுவான கண்ணோட்டத்தில் அதைப்பார்த்துப் பழிப்பது இயல்பாகிவிட்டது. காதலின் தேடல்கள் எங்கு முடியும் என்று நினைக்கிறீர்கள்?  காமத்தில்தான் அதில் எந்த ஐயப்பாடுமில்லை. இல்லையென்று பெயரளவில் மறுக்கலாம். ஆக, கலவிதான் வாழ்க்கையா என்றால் சமயங்களில் ஆமாம் என்பதே பதில். பெண்கள் தனக்கு வேண்டியதைத் தயங்கியே சொல்ல வேண்டியுள்ளது அல்லது சொல்லாமல்யிருப்பது இவ்விஷயங்களில். இன்றளவும் அதற்கான காரணம் ஆண்கள் பெண்களைக் கையாளும் விதம். "என் வாழ்க்கையை நான் இழந்துவிட்டேன்" என்பது தாம்பத்யத்தையும் குறிக்கும்.

  குறுகிய மனம் கொண்டு இதை அணுகினால் உவர்ப்பாகவே இருக்கும். இதில் என்ன தவறு  இது அவளின் வாழ்க்கை, அவளின் தேவை, அவளின் நீட்சி என்பது புரிந்தால் பேதமில்லை. அவளின் உணர்வுகள் நிராகரிக்கப்படுகிறது அல்லது மதிப்பதேயில்லை என்னும் சூழலில் தன் உணர்வுகளைக் கொட்ட ஓர் உறவின் வெளித்தேவைப்படுகிறது. அவளின் தேவையைக்  கொச்சைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதே மனிதர்களின் இயல்பு.  பெண்ணிற்கு மட்டும் விதிவிலக்கா?

 "சிக்மண்ட் ஃப்ராய்ட்" பற்றிப் படித்திருந்தீர்கள் என்றால் கொஞ்சம் புரியும் அதிகப்படியான மனநோய், நிரம்பியல் நோய்கள் என நோய்கள் வருவதிற்கான காரணங்கள் பாலுணர்ச்சி என்பதே அவரின்  கோட்பாடுப் பல அய்வுகளின் பெயரில் வெளியிட்டார். வழக்கமாகப் பல பாராட்டுக்களும் , எதிர்ப்புகளும் ஒருசேர அவருக்கு வந்தது. அது ஒர் உளவியல் ரீதியான பிரச்சனை என்பது இங்குப் பலருக்கும் புரிவதில்லை. அதை இழிவாகப்பார்த்து மிகச் சுலபமாகக் கொச்சைப்படுத்திவிடுகின்றனர். அப்படிச் சொன்ன ஃப்ராய்ட்தான் father of psychology. பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு, தேவைகள் உண்டு, ஆசைகள் உண்டு என்பது புரிந்தால் நலம்.


10 comments:

  1. நிதர்சனமான உண்மை.

    ReplyDelete
  2. காதலைக் கல்லாமையின் விளைவு அது. # நீண்ட நாட்களுக்கு முன்பு "கமலா சுரையா" அவர்களின் புத்தகம் உண்டாக்கிய தாக்கம், நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவால் தற்போது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழர்.

      Delete
  3. No words to say. Amazing. You are so talented person. I am proud to have your friend ship

    ReplyDelete
  4. ஆம் பெண்களுக்கும்​ ஆசை உண்டு
    சில பெண்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மனம் பாதை மாறி பயணிக்கும் இதற்கு ஒரு மனம் மட்டும் காரணம் இல்லை திருமணம் செய்த இரு மனமும் காரணம்தான்​...... தோழி

    ReplyDelete
    Replies
    1. நான் சொன்ன விஷயம் உங்களை சென்று அடைந்திருப்பதில் மகிழ்ச்சி தோழர். 👍🏻😊😊

      Delete