Saturday, June 9, 2018

என் கீச்சுகளின் தொகுப்பு

அமைதியாக இருப்பது மாபெரும் தவம்.  ஆகச்சிறந்த  அவஸ்தை.

புனைவுகள் எது நிஜம்  எது என்று தெரியாதளவு கலந்திருப்பதுதான் இந்த வாழ்க்கையின் சாராம்சம்.

அன்பு அனைத்தையும் சூறையாடிவிட்டு உயிரை மட்டும் விட்டுவிடும்.

முடியாத நேரத்தில்
எல்லாம் முடிந்து விடுவதுதான்
முடிவிலியின் இயல்பு

உவர்பும் இனிப்பாக
மாறும் தருணம்
உண்டு.

அன்பு என்பது வேறு தன்மானம் என்பது வேறு என்பது பலப்பேருக்கு இங்கு புரிவதில்லை.

என்ன இப்படி மாறிட்ட என்பவர்களுக்கு காலத்தின் வலிமைப்பற்றி புரிவதில்லை.

நீங்கள் ஏமாற்றம் அடைவில்லை என்பது உண்மையல்ல  இன்னும் அத் தருணம்  உங்களுக்கு வாய்க்கவில்லை என்பதே உண்மை.

ஓர் விஷயத்தில் தீர்வு காணாமல் அதை தள்ளிப்போடுவது.. ஆண்களுக்கு ஓர் அலாதி.

‪கோடையை தணிக்கும்‬
‪உன் ஒற்றை முத்தம். ‬
அடையாள அட்டைகளிள்
நம் அடையாளத்தை
தேடுவதே அதன் சிறப்பு.

சேர்க்காமல் விட்ட
புள்ளிகள்தான்
பின்னால் கேள்விகளாய்
தொடர்கின்றன.

புத்தகம் படிக்கும் பொழுது வார்த்தைகளாய் மாறிவிடுவதுதான் அதன் சிறப்பு.

யாருக்காகவும் காத்திருக்காத
தருணங்கள்
வலி மிகுந்தவை.

ஒரு பொண்ணு மேல் கடுப்பாகிட்டா அவ கேரக்டரை தப்பா பேசுவதை முதல்ல நிறுத்துங்கடா இந்தியா வல்லரசாகிடும்.

அறிவீனங்களின் ஆரம்பம்
அன்பு பெருகுமிடம்.

Most of the foolish would think they’re wise.

பெண்ணியம் என்பது எப்படி திருப்பினாலும் நம்மை குத்தும் ஒர் ஆயுதம்.

‪நாம செத்தா நாலு பேர் அழுகனும்ன்னு நினைக்கறவங்களவிட.. எவன் செத்தா நமக்கென்ன என்பவனுங்கதான் அதிகம் இருக்கானுங்க. #டிசைன் ‬

அழகு ஓர் முகத்திரை
அன்பு ஓர் முகம்

உளறுகிறேன் என்றுதான் உண்மையை சொல்ல வேண்டி இருக்கிறது.


ஒரு காலத்தில் நமக்கு எல்லாமும்மாக  இருந்தவர்கள் இன்று  எதுவுமாகவே இல்லாமல் போவது வாழ்க்கையின் வலிமையா இல்லை மாற்றத்தின் நிலையா.?

சமரசம் செய்யாத  உறவு ஏதுமுண்டா?

Actually, we have to remain some people at some times that we do have self respect.


சில பேர் நல்லாருக்கும் போதே போதையில் இருக்கா மாதிரி பேசுறானுங்க சில பேர் போதையில் இருக்கும் பொழுது ததான் கரைட்டா பேசுறாங்க.


தூய்மையான தோழமையென்றால் அதை ஆண்களிடம் மட்டுமே பெற முடியும்.பெண்களிடம் அது சாத்தியமில்லை. ஒரு துளியெனும் அதில் பொறாமையும், வஞ்சத்தையும் கலந்துவிடுவார்கள்.

எவ்வுளவு காலம்தான் வலிக்காத மாதிரியே நடிப்பது இந்த வாழ்க்கைகிட்ட.

பெண் எப்பொழும் தன்னை ஒர் உறவாக்க முற்படுவாள் சகோதிரி, தாய் என. ஆனால், ஆண்கள் பெரிதாக பெயர்கள்  எதுவும் தேடுவதில்லை எப்பொழுதும் ஒரு தோழமை உணர்வுடன்  இருப்பர்.

எங்கோ மனிதம் பிழைத்து இருக்குமாயின் அதுவும் கடவுள் மாதிரி கல்லாவே இருக்கு போலும்.

நிறைய புத்தகங்களை கண்களிலேயே விழிங்கிவிட  ஏங்குவது பேராசைதான் இருப்பினும் தடுக்க முடியவில்லை.

பெண்கள் தினம் கொண்டாடவும், வாழ்த்து சொல்லும் அளவிற்கும் உங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கோம்ன்னு சொல்லுவானுங்க அவுங்களை மிதிங்க முதல்ல. # women's day


இரவில் சிலையை தாக்கிய கோழைகளுக்கு பகல்களை விரயம் ஆக்காதீர்கள்.#பெரியார்

There's no independent rat in front of the cat. #HappyWomensDay2018


வாழ்க்கை பல விஷயங்களை நமக்குத்  தரும் பொழுது  conditions applied  என்ற குறிப்போடுதான் தருகிறது நாம்தான் அதை  கவனியாமல் களத்தில் இறங்கிவிடுகிறோம்.

பொய்க்கு புனைவு எழுதுவதுதான் கவிஞர்களின் வேலை. #கவிதை


Don't argue and waste your time with the people. Who don't have content with their argument and their only aim is to win the argument.


Life is always giving you only one option that's 'Yes'.

ஒருவனும் ஒருத்தியும் சந்தோஷமாக இருக்கனும்ன்னா அந்த  ஒருவனும்,  ஒருத்தியும் கல்யாணம் பண்ணக்கூடாது. #டாக்டர்ஷாலினி

பெண்கள் எல்லாம் ஆஃப்பாயில் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு  உண்மை ஆண்கள்  தன்னை ஒரு ஹீரோவாக project  பண்ண முயல்வதும்.

பொய்யை புதுப்பித்துக்கொண்டே வருவதுதான் வாழ்க்கை .

நாம்பாட்டுக்கு எல்லைகளை கடந்து வாழலாம் என்று ஓடினால் பொடணியில் அடித்து திரும்பு என்கிறது வாழ்க்கை.

வாஞ்சையான வதை. #கலவி

யோசிப்பதற்குள் சில விஷயங்கள்  நடந்தேறிவிடுவதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளே இல்லை என்னும்போது உறவுகள் சாத்தியமா.

சுயகௌரவம் என்பது வேறு சுயமரியாதை  என்பது வேறு. முதலாவது அதிகச்சுமை இரண்டாவது அடிப்படையான ஒன்று.

மனம் என்பது பருந்து போன்று உயரே பறந்து அலைந்துக்கொண்டு இருக்கும் தன் இரைக்காக.

எல்லா  உறவுகளுக்கும் அநாவசியமாக பெயர் தேடிக் கொண்டு இருக்காதீர்கள்.

எத்தனையோ அன்பின் முன்னால்
காலம் தோற்றுப்போய்யுள்ளது.

அன்பிற்கு நிரூபணங்கள்
தேவையில்லை
அர்ப்பணங்கள் போதும்.

ஒரு சில பாடல்கள் நமக்கு பிடித்தவரின் அன்பை அள்ளிக்கொண்டு வந்து தந்துவிடும்.

இசையால் வார்க்கப்பட்ட ஒரு சில உறவை வார்த்தைகளால் சொல்ல  இயலாது.

புனைவுகள்தான் எத்தனை அழகு, வாழ்க்கை போன்று.

வாழ்க்கை நமக்கனவே தேர்வு செய்து வெகு சிலரை அனுப்புகிறது. அவர்களை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில் இருக்கிறது நம் திறமை.

"காலத்தின் கட்டாயம்" என்பது நூறு சதவீகிதம் கல்யாணதிற்கே பொருந்தும்.

சில கதவுகள் தட்டாமலே திறக்கப்படும் ஓசையின் வழியே.

தொடக்கமே முடிவின் துவக்கப்பள்ளி.

தேக்கி வைத்துக்கொள்ளுங்கள் சில உறவுகளை சமயங்களில் நீந்த தேவைப்படும்.

மோடி சர்கார் என்பதை விட மோசடி சர்கார் என்பதே சரியான வாசிப்பு.

இங்கு  எழுத்துக்கும் பஞ்சமில்லை, எழுத்தாளர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால்,  வாசகர்கள்தான் குறைவு.

காலத்திற்கு நேரமே போதவில்லை போலும் கடந்துக்கொண்டே இருக்கிறது.

தீர்வு என்று ஒன்றில்லை எல்லாமே தற்காலிக முடிவு அவ்வுளவே..

குற்ற உணர்ச்சியே வரமாட்டேங்குதே அப்படின்னு ஒரு  குற்ற உணர்வு.

காந்திகளை சுட்ட மக்களால் மோடிகளை தவிர்க்க முடியவில்லை. #GobackModi

நிஜம் கற்பனை விட பயங்கரமானது.


இளையராஜா இசையில் லயிக்கலாம். .ஏ ஆர் இசையில் திளைக்கலாம். .யுவன் இசையில்தான் வாழமுடியும். #YuvanForLife

மகத்தான பொய் என்பது உண்மையை விட சிறந்தது.

காதலிக்காமல் கல்யாணம் செய்து கொள்வது புனிதம் என்று பெருமைப்படும் அளவிற்கு சமூகம் முட்டாளாய் இருந்ததை நினைக்கும்பொழுதுதான்..

அழகான நேரத்தில் மிக அறிவான கேள்விகளும் முட்டாள்தனமானதே.

அழகு எப்படி அறிவை மங்கச்செய்வது இயல்போ அவ்வளவு இயல்பு அறிவு அழகை சிதைத்துவிடுவதும்.

Nowhere to go, life is a rat trap.

தப்புன்னு எதையும் கணிக்கவும் முடியலை ..சரின்னு எதையும் எற்கவும் முடியலை.

எல்லாருக்கும் நல்லவங்களா இருக்கனும்ன்னா நடிக்கத்தான் செய்யனும்.

நம்பிக்கையின் அளவுக்கோல்
என்பது பர்ஸிலிருந்து பணம் எடுத்து தருவதும் ..பர்ஸே நம்மிடம் தருவதற்கும் உள்ள வித்தியாசம்.

சாவை நோக்கி பயணிக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை நிபந்தனைகள்.

The height of democracy is admits corruption .

Everything it's doesn't matter until it matters.

இந்த 90's கிட்ஸ்தான் என்னடா பாவம் பண்ணோம்..அப்ப நாங்க Home work செய்யலனாலும் எங்களதான் கேட்டீங்க. இப்ப  இவங்க Home work செய்யலனாலும் எங்களதான் கேட்குறீங்க. 😐

வாழ்க்கை  ஒரு கேவலமான டிசைன்  அப்படின்னு திரும்ப திரும்ப நினைவுப்படுத்துகிறது.

'பணத்தை தண்ணியா செலவு பண்ணாத' என்ற காலத்திலிருந்து 'தண்ணீரை பார்த்து பணம் மாதிரி செலவு பண்ணுங்க'  காலத்திற்கு வந்து இருக்கிறோம்.

தான் புத்திசாலியாக தெரிய  உடன் நாலு முட்டாள்களை வைத்துக்கொள்ளுதல் போல்தான் சிலர் தன் மனைவியை தேடுகிறார்கள்.  நீ அழகாக  இருந்தால் மட்டும் போதும் யோசிக்க வேண்டாம்.

தெளிவான குழப்பம் வரும் போது. சரியா தப்பான முடிவு எடுத்துடுறோம்.

விருப்பமில்லாத விரும்பங்களை கருணையின்றி நிராகரிக்க தேவை இன்னொரு இதயம்.

பொய்க்கு தான்   அழகான முகம். .உண்மையின் முகம் விகாரமானது. அதை எதிர்க்கொள்ள ஒரு துணிவு வேண்டும்.

சிலர் பேர் பொய் பேசி பேசி கடைசியில்  உண்மை எதுன்னு அவங்களே குழம்பிடுறாங்க..

பொய்யான வாக்குறுதிகளே நம்பிக்கையின் அச்சாணியாக அமைவதுதான் நகை முரண்.

சில உணர்வுகளை உணர்ச்சி இன்றி  தேமே என்று கடத்த  ஆங்கில மொழி மிகச்சரியாக பயன்படுகிறது.

சுயபச்சா தாபம் வருகிற மாதிரி கேவலமான  உணர்வு வேறில்லை.

தன் பிள்ளைக்கு  அப்பா வேண்டும் என்பதாலே பெருவாரியான பெண்கள் தன் கணவரை சகித்துக் கொள்கிறார்கள்.

ஆண்களில் சில்லறைகள் கிடையாதுதான் பெண்கள் போல்.ஆனால், பெருஞ்சில்லறைகள் உண்டு.

ஆண்களின் மதி நுட்பம் பெண்களை கையாள்வதில் வெளிப்படும்.

அரசியல்ன்னா என்னனே தெரியாதுன்னு சொல்றவங்க பண்ற அரசியல்  இருக்கே.

பெண்களின் பெரும் கனவுகளை சல்லி சல்லியாக உடைப்பதே கல்யாணம்.

மாறுதலே நிஜம் மற்றவையெல்லாம் பொய்.

கட்டணமில்லா தேர்வுகள் வாழ்க்கையின் அனுபவங்கள்.

எல்லாருமே உண்மைக்கு
அருகேதான் இருக்கிறோம்.ஆனா,உண்மையை யாரும் பார்த்தது இல்ல.

பிடித்திருப்பதால் வானவில்லை உடுத்திக்கொள்ள முடியாது.

நேசத்தின் கரங்கள் சமயங்களில் கறை படிந்து இருக்கிறது.

பலி இடத்தில் நம்மையே வைத்துப் பார்த்தால்தான் அதன் வலி புரிகிறது.

முட்டாள்களுக்கு வெவ்வேறு பெயர்கள்  உண்டு.

காலம் தாழ்த்தாமல் கடக்கிறது காலம்.

எழுவதுவது அத்துணை சுலபமல்ல  வீழ்வதுப்போல். ஆனால்,  எழ வேண்டும்  என்பதுதான் நம் முன்னிருக்கும் சவால்.


எத்தனை ஆர்ப்பாட்டமான பகலாக இருந்தாலும் அநாவசியமாக விழுங்குகிறது ஓர் இரவு.

எதார்த்தமாக இருப்பதும் சமயங்களில் அத்துணை ஆபத்தானது.

எதோடும் சேராத மனநிலை காற்றில் பறக்கும் சருகேன மிதக்கிறது.

அன்பின் கதவுக்கும் கள்ளச் சாவிகள் உண்டு.

அனைத்து விஷயங்களிலும் தரவுகள்  எதிர்ப்பார்க்க முடியாது.

No comments:

Post a Comment