Sunday, June 10, 2018

காலா - கருப்பு நெருப்பு



'காலா' பற்றி என்னளவிலான புரிதல். உண்மையில் தற்கால அரசியலின் வேர்வரை எடுத்துரைத்தற்காகவே இயக்குனர் ரஞ்சித்தை வரவேற்கலாம். 


திரைப்படத்தின் தொடக்க காட்சியே போராட்டமாக அமைத்திருப்பதே ஒரு நல்ல தொடக்கம். வழக்கமான நில உரிமை கோருதலும் அதற்கான விளைவுகளும்தான் என்றாலும் மிக துள்ளியமாக இதை அரசு என்னும் அதிகார வர்க்கம் எப்படி நகர்த்துகிறது என்பதை போட்டு உடைத்திருக்கிறார்.

'மனு' என்னும் கன்ஸ்ட்ரக்ஷன்,  மனு தர்மத்திற்கு  எதிரான வசனங்கள்,  கருப்பு உடை , ஒரு பெண்ணின் ஆடை உருவியப்பின்னும் அப்பெண்  போலிசை எதிர்த்து அடிப்பது, இறுதியில் பூமி பூஜை போட வரும்பொழுது வண்டிகளின் எதிரில் அதவாது தாராவியில் பெரியார் சிலை இருப்பது என பெரியாரியத்தை நிலைநாட்டியுள்ளார்.


இந்த இடத்தை விட்டு போகிறோம் என்று காலாவின் மகன் கூறுகையில் ..காலாவின் வசனம் அருமை..'இந்த இடத்தை விட்டு போய்டா எல்லாத்தையும் மாத்திட்டா மறந்துட்டா மட்டும் சந்தோஷமாக வாழ்ந்துடுவியா'. வசனங்களும் நன்றாக கூர்மையாக இறக்கியிருக்கிறார். ஃபாஸிசம் பற்றி ஹுயுமா பேசுவது.மனுதர்மத்தை பற்றி ஹரிதேவ் வீட்டில் காலா பேசுவது மற்றும் 'நிலம் உங்களுக்கு அதிகாரம் . நிலம் எங்களின் உரிமை' போன்ற வசனங்கள்  ஐஸ்கிரீம் டாப்பிங்ஸ்.


மூன்று நிறங்களை கையாண்டு இருக்கிறார் கருப்பு, நீலம், சிவப்பு. .பெரியாரியம், அம்பேத்கர், மார்க்சிஸம். இந்து, முஸ்லிம் பிரிவினையை உண்டு செய்வது. தற்கால சர்கார் மேற்கொண்டிருக்கும் 'கிளீன் இந்தியா' திட்டத்தை கிழித்திருப்பது என வழியெங்கும் அரசியல். வறுமையை ஒழிக்கிறோம் என்று வறுமையானவர்களை ஒழிக்கும் திட்டமும் அதன் செயல்களையும் அப்பட்டமாக வடித்துள்ளார்.


இப்படத்தில் ரஜினி ஏற்றிருக்கும் காதாபாத்திரத்தை அழகிலோடு வெளிப்படுத்திருகிறார். தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் ஒரு அசைக்க முடியாத பின்பம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. அசாத்திய நடிப்பு மனைவிடம் கெஞ்சுவதும், காதலியிடம் குழைவதும் என. மகன்களிடம் கோபப்படுவது, சிறைச்சாலையில் 'குமாரு யார்  இவரு' என்னும் பொழுது திரையரங்கமே அதிர்கிறது.பழைய காதலியை பார்த்து பதட்டம் அடையும் சமயம். சின்ன சின்ன உணர்வுகளை அழகாக கடத்துகிறார்.


அவருக்கு நடிப்பிலும் இணை கொடுத்துள்ளார் ஈஸ்வரி ராவ் செல்வி என்ற காதாப்பாத்திரத்தை ஏற்று. ஐ லவ் யூ என்றவுடன் பனியாய் உருகுவதும் . கணவனின் காதலி விஷயத்தில் பொங்குவதும் என்ன பொளந்து கட்டியிருக்கிறார். ஹுயுமா குரேஷியும் சொல்லும்படியாக நடித்திருக்கிறார். சமுத்திரகனி வழக்கமாக அவர் நடிப்பில் அவர் தனியாக மின்னுகிறார். மகாராஷ்டிரா பெண்ணாக சாருமதி கதாபாதாதிரத்தில் வரும்  பெண் கவர்கிறார் . இம்மாதிரி பெண்களைத்தான் பாரதியும், பெரியாரும்  தேடிக்கொண்டிருந்தது. மனதில் நிற்கிறார் அப்பெண்.


இவ்வுளவு நல்ல விடையங்களுக்கு மத்தியில் சில லாஜிக்கள் ஓட்டைகளும் இருக்கிறது. காலா கேரக்டரை அத்துணை சரியாக வடிவம் பெறவில்லை. காலா நில  அபகரிப்பை எதிர்ப்பதை தவிர வேறு ஒன்றும் செய்தபாடில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன.  சந்தோஷம் நாராயணனின் வாழ்வியல் இசை இசையந்தாடுக்கிறது. தேவையான அளவு உப்பு போல் தேவையான அளவு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது.


இதில் இன்னொரு மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவெனில் மெர்சல் திரைப்படத்தில் GST பற்றி ஒரே வசனம் பேசியதற்கு பொங்கிய பாஜாகாவால் இப்படத்தில் ரஜினி நடித்திருப்பதால் பஃப்ளிக் டாய்லேட்டில் இருப்பதுப்போல் உள்ளேவும் இருக்க முடியவில்லை வெளியெறவும் முடியவில்லை. தற்கால  அரசியலும்,  அரசியல்வாதிகளையும் கண் முன் நிறுத்தியதற்காகவும். சாதி, மத பிரிவினைகள். வர்க்க  பிரிவினைகள். பாஜக,  ஆர்.எஸ்.எஸ் போன்றவற்றை துகிலுரித்து காட்டியதற்காகவும். தாராளமாக கொண்டாடலாம் காலாவை காலம் தாழ்த்தாமல். #காலா

8 comments:

  1. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    ReplyDelete
  2. பப்ளிக் டாய்லெட்டில் பா.ஜ.க :)

    ReplyDelete
  3. Nice one...but all people discuss about the story..what about technical...Editor..camera man and art director?

    ReplyDelete
    Replies
    1. I have mentioned it clearly..Just screenplay is good not the story plot.

      Delete