திருமணத்துக்கு வெளியேயான உடலுறவு குற்றமில்லை என்ற தீர்ப்பை எதிர்ப்பவர்களுக்கெல்லாம் திருமண உறவைப்பற்றிய சரியான புரிதல் இல்லை என்றே கருத தோன்றுகிறது. மேலும் நீதிபதிகள்
நீக்கிய 497 சட்டப்பிரிவின் படி கல்யாணம் ஆன பெண்ணுடன் அவளின் கணவருக்கு தெரியாமல் உறவு வைத்துக் கொள்ளும் ஆணுக்கு மட்டும் தண்டணை ஐந்து வருடம் சிறை அல்லது அபராதம்.அப்பெண் கணவனுக்கு தெரிந்து வைத்துக்கொண்டால் தவறில்லை என்பது அந்த பெண்ணை அசையும் சொத்தாக கணவர் பாவிப்பதையே குறிக்கிறது . மற்றும் அதே கணவன் உறவுக்கொண்டிருந்தால் மனைவி
முறையீடு செய்ய முடியாது .என்றுதான் அதை நீக்கி உள்ளனர். கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்கு எஜமானர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றே சூளுரைத்திருக்கிறார்கள் இந்த தீர்பில். 150 ஆண்டுக்கால பழைமையான ஆண் ஆதிக்க சட்டத்தை நீக்கியது நல்ல முடிவு.
இருவரின் பரஸ்பர ஒப்புதலோடு நடக்கும் உறவு எப்படி குற்றமாகும். தீர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளுதல் மகிழ்ச்சியற்ற திருமண உறவையே குறிக்கிறது என்று. இதற்கு தண்டிக்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் இதை காரணம் காட்டி விவாகரத்து செய்து கொள்ளலாம். வெளியான தீர்பை பெரும்பாலும் தவறாக புரிந்துக்கொள்கின்றனர். ஓரினச்சேர்க்கை தீர்ப்பை அடுத்து மற்றுமொரு வரவேற்க வேண்டிய தீர்ப்பு.
#AdulteryVerdict
No comments:
Post a Comment