பேட்ட ரஜினி ரசிகர்களான மீள் திரைப்படம். நாம் அவரைக் கொண்டாடி ரசித்த அத்தனை விஷயங்களையும் ஒன்றாகஅளித்து விருந்து படைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இளமை உத்வேகமும், ஈர்க்கும் அவரின் அபரிவிதமானஸ்டைலும், சிணுங்கல்களின் துள்ளலும் திரைத்தாண்டவம்.
பேட்டை இன்றைய பாட்ஷா வெர்ஷன் . வின்டேஜ் ரஜினியை கண் முன் நிறுத்தியதற்காகவே கா.சுப்புவைகொண்டாடலாம். படம் முழுவதும் ரஜினியிஸம் ஆனால், கொஞ்சமும் அலுக்கவில்லை. இதில் ஆங்காகங்கே வரும்இளையராஜா பாடல்கள் அடட் ஃப்ளேவர்..பாடல்கள் மட்டும் இன்றி பிஜிஎம்மும் அசரடித்திருக்கிறார் அனிருத். சிம்ரன்நல்ல கம் பேக். ஜித்தாக வரும் விஜய் சேதுபதி வழக்கமான இயல்பு. இன்னும் அந்த கேரக்டரை கொஞ்சம் விரிபடுத்திஇருக்கலாம். கொஞ்சம் சேர்த்தாலும் சுலபமாக ரஜினியை விழுங்கிவிடுவார் என்பதால் கூட அதைத் தவிர்த்திருக்கலாம்.
கலர்ப்பூல் ஒளிப்பதிவு.வண்ணங்களில் மாயம் செய்திருக்கிறார் முரளி. வில்லன் நவாசுதீன் அவ்வளவு பெரியகாதபாத்திரம் இல்லை. அதற்கு அவர் தேவையுமில்லை. வயதான தோற்றத்தில் வரும் பொழுது கவர்கிறார். மற்ற நடிகர்பட்டாளம் அனைவரையும் கொஞ்சம் தொட்டுக் கொண்டார். முழுவதும் ரஜினிகாந்த் என்னும் ராட்சனின் ஆக்கிரமிப்பு. பேட்டை வேலின் வேட்டி ஆட்டமும், வார்ட்டனாக போடும் துள்ளலும் மரண மாஸ் என்பது துளியும் சந்தேகமில்லை.
கார்த்திக் சுப்புராஜ் படங்களில் இருக்கும் மிஸ் மேரைஸிங் இப்படத்தில் கொஞ்சம் மிஸ் திரைக்கதையில்.ஆனால், அவர்அதை அழகாக ரஜினியின் மூலம் தந்துள்ளார். உண்மையில் பேட்டை ஒரு சிறப்பாக தரமான சம்பவம்.
#பேட்ட
No comments:
Post a Comment