Friday, February 24, 2017

கோபம்

கைகளை பற்றி இழுத்தேன்

நீ கவனியாமல் இருந்ததால்

பொய்கோபம் கொண்டு நகர்ந்தேன்

சலனமே இல்லாமல் அருகில் 

அணைப்பதற்கு ஏதுவாக நின்றாய்

பார்க்காமலே பார்த்தேன் 

எவ்வுளவு நேரம்தான் கோபம் இல்லாமல்

கோபிப்பது

முத்தத்தின் வாயிலாக மெத்தையின்

வசத்தில்

உன்னை விலக்குவதுப்போல்

அணைத்துக்கொண்டிருந்தேன்

நீ நீந்தினாய்

நான் நீராடினேன்.

2 comments:

  1. கோபம் இல்லா கோபம்...
    அன்னையிடமும் மனைவியிடமும் மட்டுமே
    அனுபவித்தல் முடியும்.!
    ��

    ReplyDelete