Friday, March 9, 2018

அதிபுத்திசாலிகளுக்கான பதிவு


அதிபுத்திசாலிகள் கேட்கும் கேள்வி பெரியாரே சிலை வைக்கும் முறையை எதிர்த்தார் , பிறகு ஏன் அவர் சிலையை அகற்றக்கூடாது என்பதே. இங்கு ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் சிலை வழிபடுதல் வேறு சிலையாக இருப்பவரின் வழி நடப்பது என்பது வேறு. மரியாதை நிமித்தமாகவும், நினைவுக்காகவும் சிலை வைப்பது இதில் அடங்காது. உதாரணத்திற்கு நம் வீட்டில் மறைந்த பெரியவர்களின் புகைப்படத்தை நாம் வைத்துக்கொள்ளுதல் போல்தான் இதுவும். அப்படியே இருப்பினும் இப்பொழுது சிலை வைக்கச் சொல்லி யாரும் வலியுறுத்தவில்லை இருப்பதைச் சேதப்படுத்த வேண்டாம் என்பதே அனைவரது விருப்பமும். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் சுயநலத்திற்காக பாடுபட்டு வாழ்ந்தவர்களுக்கு எல்லாம் சிலை இருக்கும் இத்தேசத்தில் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவருக்கு சிலை இருப்பதில் தவறேதுமில்லை. 

இங்குத் தோழர் ஒருவரின் பதிவு நினைவுக்கு வருகிறது 'பெரியாரை பழமைவாதி என்று சொல்ல இன்னும் சில நூற்றாண்டுகள் தேவை' .

கடவுள் எதிர்ப்பார்பாளர்க்கும் , கடவுள்  மறுப்பார்களுக்கும் வித்தியாசம்  உண்டு. நாத்திகத்துக்கும் பகுத்தறிவுக்கும் வித்தியாசம் உண்டு. காந்திக்கும் கோட்சேவுக்கும் உள்ள வித்தியாசம் போன்று.

No comments:

Post a Comment