Thursday, March 1, 2018

பசி

பசி ஒரு கொடூரமான
மனிதன் இங்கு விலங்கு என்று
விளித்தால் அவை கண்டனம் தெரிவிக்கும்

அப்பசி ஒன்றையும்
விடுவதில்லை சுவாசிக்கும் காற்றைக்
கூட யாசகம் கேட்க வைக்கும்

எவ்வளவு இரத்தத்தை
குடித்தாலும் அதன்
தாகம் தணிவதேயில்லை
கடல் நீர் போல்
ஆர்ப்பரித்துக் கொண்டேயிருக்கும்

கதறல்கள் எல்லாம்
ஆனந்த இசை ஆயின
மழலைகளை பூச்சிகள்
போல் நசுக்கின

எண்ணிலடங்கா மொட்டுகளை வரிசைப்படுத்தி தன்
சுய இன்பத்தை வெளிப்படுத்தியது அக்கோரப்பசி

மனிதம் என்ற சொல்
அகராதியிலிருந்து
கிழித்தாகிவிட்டது

இரத்தம் தோய்ந்த யோனிகள் பழகிவிட்டன
தேனீர் கோப்பைப்போல்

மனிதம் மரித்து
அதன் மேல் படர்ந்துள்ள
கொடியை
வேடிக்கை பார்த்துக் கொண்டியிருக்கிறோம்
சற்றும் தயங்காமல்.

No comments:

Post a Comment