Tuesday, December 22, 2020

Dark

 Science fiction என்றாலே ஒரு த்ரில்தான் அதிலும் டைம் டிராவல் என்றால் செம ஸ்விங். Dark அப்படி மிரட்டிய ஒரு சீரிஸ். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரிவில் பண்ணும் போது நமக்குக் கண்கள் வெளியே வந்துவிடுகிறது திரும்பவும் எடுத்து பொருத்திக் கொண்டு பார்க்க வேண்டியதா உள்ளது. நம் மூளையின் திறன் ஒளி வேகத்தில் இயக்க வேண்டியிருக்கிறது. முதல் இரண்டு எப்பிஸோட் வெயிட்டே இல்லை இவ்வளவு ஈசியா இருக்கிறது மோடாகத் தோன்றும். மெல்ல மெல்லப் புதை குழியில் இழுத்துக் கொள்கிறது. வெவ்வேறு வருடங்கள் கடந்த காலம், எதிர் காலம் என்று மேலும் பேர்லல் வெல்ர்ட் வேறு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மூன்று அல்லது நான்கு physical existence. சந்தேகமே இல்லாமல் It's a complete labyrinth. முதல் சீசனில் வந்த காட்சிகள், டையலாக் என்று சின்ன சின்ன டிடையில்ஸ் கூட அழகா மூணாவது சீசனில் இணைத்திருக்கிறார்கள். அநியாயமான காட்சி கோர்வை. அப்படியே மூளையை ஸ்பிலாஸ் செய்தது போல். இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமான்னு.. ஏன்ப்பா ஏய் மூளையைக் கொஞ்சம் பெண்டிங் வைங்கப்பா.  ரொலர் கொஸ்டரில் ரைட் போன ஒரு ஃபில். நிச்சயம் பாருங்க செம அனுபவமாகயிருக்கும்.


The beginning is the end and the end is the beginning.


#DarkNeftlix

Breaking Bad

பெரும்பான்மையானவர்களால் ஈர்க்கப்பட்ட Breaking Bad  என்னும் Netflix series போற போக்கில் டிரக் மாஃபியாகளின் உலகின் எதார்த்தங்களை வரைந்து மிரளவைத்திருக்கின்றனர்.  Mr. Walter White என்னும் ஐம்பது வயது திறமையான கெமிஸ்ட்ரி புரொபஸர்  திடீரென தெரியவந்த கேன்சர் காரணமாக இன்னும் ஒரு வருடமே இருக்க முடியும் என்றவுடன்  கர்ப்பிணியாக இருக்கும் மனைவியும், பதினைந்து வயது மாற்றுத்திறனாளி மகனும் என்ன செய்வார்கள் என்ற அச்சத்தில் பணம் சேர்க்கும் முயற்சி எங்குக் கொண்டு போய் நிறுத்திருக்கிறது என்பதே கதை.


இத்தொடரில் வரும் முக்கிய மான கதாபாத்திரங்களின் நடிப்பு அவ்வளவு உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். என்னை மிகவும் கவர்ந்தவர் Gustav Fring. மிகப் பொறுமையாகக் கையாளப்படும் வார்த்தைகள் முதல் யுக்தி வரை ஆர்ப்பாட்டமில்லாமல் நிகழ்த்துவார். அந்த மிடுக்கும் பொறுமையும் அவர் இறக்கும் போதும் கூட அந்த visage மிரட்டிட்டார். அமெரிக்காவின் மற்றொரு முகத்தின் காட்சிப்பிடிப்புகள். வறண்ட உலகின் நிகழ் தடங்கள்.


வாழ்வின் ஒரு செயல் அதன் தொடர்ச்சி, ஒரு சின்ன grudge கூட கூட்டிப் போகும் தூரமும் அதற்கான விளைவுகளும் என்று யோசிக்க யோசிக்க அதீத பிரமிப்பைத் தரும் screenplay.  இவர் இப்படிச் செய்யக் கூடியவரா அல்லது இவர் இதற்குத் துணிந்தவரா என்ற படபடப்பு Skyler யை விட நமக்கு அதிகம் தொற்றுகிறது. அந்த நிதானமான திட்டமிடலும், செயல்முறையும் சாதுரியமாகக் கையாண்ட Walt character deserves  applause. குடும்பத்திற்காக என்று தொடங்கி குடும்பமே அவரை வெறுத்து கிளிஃபில் வந்து நிற்பதுதான் Breaking Bad. Highly recommended to watch.


#BreakingBad

Unbelievable

மோக முள்க்கு பிறகு ஓர் ஆங்கில க்ரைம் நாவல்.. இப்பனிக் காலத்துக்கேற்ற காக்டெய்ல். Unbelievable என்கிற இப்புத்தகம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் Netflix ல ஒரு சின்ன தொடராகவும் வந்திருக்கு. ரேப் செய்யப்படும் பெண்களின் மன உளைச்சல் மற்றும் உடல் மொழி எவ்வாறு இருக்கிறது. குற்றமாகப் பதியப்படும் ஆவணங்களில் எத்தனை உண்மையான கேஸ் எத்தனை பொய் மற்றும் பொய் என்பதை எப்படி ஆராய்ந்து அறிகிறார்கள் என்பதை அழகா சொல்லியிருக்காங்க. இன்னும் முழுசா படிச்சு முடிக்கலை படித்தவரை its intriguing.

தொடர்ச்சி

புத்தகத்தைப் படித்தவுடன் ஒன்று புரியவந்தது மற்ற குற்றங்கள் போல் இல்லாமல் இதில் யார் விக்டீம் என்ற skepticism அதிகம் வருகிறது அதற்கான காரணம் நிறையப் பொய்யான கேஸ்களும் பதியப்படுவதற்கான காரணம். The 'Hale Warning' என்ற ஒரு விதியை அமேரிக்கா, இங்கிலாந்தில் எல்லாம் கடைப் பிடிக்கிறார்கள். Hale என்பவர் பதினேழாம் நூற்றாண்டு நீதிபதி அவர் இப்படிக் கூறுகிறார் 'rape is an accusiation is easily to be made, hard  to be proved, harder yet to be defended by the party accused, tho' never so innocent.'

  

சமயங்களில் consensual sex கூட பொய்யான குற்றமாக பதியப்படுவதினால் இக்குற்றத்தைக் கையாள்வது மிக impenetrable. ஒரு அப்பாவிக்குத் தண்டனை கொடுத்திடக் கூடாது அல்லது ஒரு விக்டிமை கைவிடக் கூடாது என்ற நிலையில் அணுக வேண்டியுள்ளது. இப்புத்தகத்தில் மேரி என்ற பெண் rape case file பண்ணுவார். அக்குற்றவாளிக்கான சரியான ஆதாரம் கிடைக்காமலும் மேரி கூறுவது சமயங்களில் பொய்யாக இருப்பது போல ஒரு தோற்றம் தருவதால். விக்டீம்மான அப்பெண்ணிற்கு நீதி கிடைக்காமல் மற்றும் false accusiation case போடுவார்கள். இதே இப்படியான குற்றங்களைக் கையாள்வதில் இருக்கும் சிரமம். உண்மையில் அக்கொடுமைக்குள்ளான பெண்களின் trauma சொல்ல முடியாத விளைவு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாகப் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். சிலர் தரும் பொய்யான புகார்களால் இப்படி அப்பாவியான விக்டீம்ஸ் மேலும் விக்டீம் ஆகப்படுகிறார்கள். மட்டுமல்லாது photo collage செய்வது போல் அவர்கள் மேல் புகார் தெரிவித்து அவர்களை முழுவதுமாக உடைத்துவிடுகிறார்கள். The people who are investigating this kind of crimes should behandle this like a glass of wine with more heedful.


#unbelievable