பெரும்பான்மையானவர்களால் ஈர்க்கப்பட்ட Breaking Bad என்னும் Netflix series போற போக்கில் டிரக் மாஃபியாகளின் உலகின் எதார்த்தங்களை வரைந்து மிரளவைத்திருக்கின்றனர். Mr. Walter White என்னும் ஐம்பது வயது திறமையான கெமிஸ்ட்ரி புரொபஸர் திடீரென தெரியவந்த கேன்சர் காரணமாக இன்னும் ஒரு வருடமே இருக்க முடியும் என்றவுடன் கர்ப்பிணியாக இருக்கும் மனைவியும், பதினைந்து வயது மாற்றுத்திறனாளி மகனும் என்ன செய்வார்கள் என்ற அச்சத்தில் பணம் சேர்க்கும் முயற்சி எங்குக் கொண்டு போய் நிறுத்திருக்கிறது என்பதே கதை.
இத்தொடரில் வரும் முக்கிய மான கதாபாத்திரங்களின் நடிப்பு அவ்வளவு உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். என்னை மிகவும் கவர்ந்தவர் Gustav Fring. மிகப் பொறுமையாகக் கையாளப்படும் வார்த்தைகள் முதல் யுக்தி வரை ஆர்ப்பாட்டமில்லாமல் நிகழ்த்துவார். அந்த மிடுக்கும் பொறுமையும் அவர் இறக்கும் போதும் கூட அந்த visage மிரட்டிட்டார். அமெரிக்காவின் மற்றொரு முகத்தின் காட்சிப்பிடிப்புகள். வறண்ட உலகின் நிகழ் தடங்கள்.
வாழ்வின் ஒரு செயல் அதன் தொடர்ச்சி, ஒரு சின்ன grudge கூட கூட்டிப் போகும் தூரமும் அதற்கான விளைவுகளும் என்று யோசிக்க யோசிக்க அதீத பிரமிப்பைத் தரும் screenplay. இவர் இப்படிச் செய்யக் கூடியவரா அல்லது இவர் இதற்குத் துணிந்தவரா என்ற படபடப்பு Skyler யை விட நமக்கு அதிகம் தொற்றுகிறது. அந்த நிதானமான திட்டமிடலும், செயல்முறையும் சாதுரியமாகக் கையாண்ட Walt character deserves applause. குடும்பத்திற்காக என்று தொடங்கி குடும்பமே அவரை வெறுத்து கிளிஃபில் வந்து நிற்பதுதான் Breaking Bad. Highly recommended to watch.
#BreakingBad
No comments:
Post a Comment