மோக முள்க்கு பிறகு ஓர் ஆங்கில க்ரைம் நாவல்.. இப்பனிக் காலத்துக்கேற்ற காக்டெய்ல். Unbelievable என்கிற இப்புத்தகம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் Netflix ல ஒரு சின்ன தொடராகவும் வந்திருக்கு. ரேப் செய்யப்படும் பெண்களின் மன உளைச்சல் மற்றும் உடல் மொழி எவ்வாறு இருக்கிறது. குற்றமாகப் பதியப்படும் ஆவணங்களில் எத்தனை உண்மையான கேஸ் எத்தனை பொய் மற்றும் பொய் என்பதை எப்படி ஆராய்ந்து அறிகிறார்கள் என்பதை அழகா சொல்லியிருக்காங்க. இன்னும் முழுசா படிச்சு முடிக்கலை படித்தவரை its intriguing.
தொடர்ச்சி
புத்தகத்தைப் படித்தவுடன் ஒன்று புரியவந்தது மற்ற குற்றங்கள் போல் இல்லாமல் இதில் யார் விக்டீம் என்ற skepticism அதிகம் வருகிறது அதற்கான காரணம் நிறையப் பொய்யான கேஸ்களும் பதியப்படுவதற்கான காரணம். The 'Hale Warning' என்ற ஒரு விதியை அமேரிக்கா, இங்கிலாந்தில் எல்லாம் கடைப் பிடிக்கிறார்கள். Hale என்பவர் பதினேழாம் நூற்றாண்டு நீதிபதி அவர் இப்படிக் கூறுகிறார் 'rape is an accusiation is easily to be made, hard to be proved, harder yet to be defended by the party accused, tho' never so innocent.'
சமயங்களில் consensual sex கூட பொய்யான குற்றமாக பதியப்படுவதினால் இக்குற்றத்தைக் கையாள்வது மிக impenetrable. ஒரு அப்பாவிக்குத் தண்டனை கொடுத்திடக் கூடாது அல்லது ஒரு விக்டிமை கைவிடக் கூடாது என்ற நிலையில் அணுக வேண்டியுள்ளது. இப்புத்தகத்தில் மேரி என்ற பெண் rape case file பண்ணுவார். அக்குற்றவாளிக்கான சரியான ஆதாரம் கிடைக்காமலும் மேரி கூறுவது சமயங்களில் பொய்யாக இருப்பது போல ஒரு தோற்றம் தருவதால். விக்டீம்மான அப்பெண்ணிற்கு நீதி கிடைக்காமல் மற்றும் false accusiation case போடுவார்கள். இதே இப்படியான குற்றங்களைக் கையாள்வதில் இருக்கும் சிரமம். உண்மையில் அக்கொடுமைக்குள்ளான பெண்களின் trauma சொல்ல முடியாத விளைவு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாகப் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். சிலர் தரும் பொய்யான புகார்களால் இப்படி அப்பாவியான விக்டீம்ஸ் மேலும் விக்டீம் ஆகப்படுகிறார்கள். மட்டுமல்லாது photo collage செய்வது போல் அவர்கள் மேல் புகார் தெரிவித்து அவர்களை முழுவதுமாக உடைத்துவிடுகிறார்கள். The people who are investigating this kind of crimes should behandle this like a glass of wine with more heedful.
#unbelievable
No comments:
Post a Comment