#கன்னித்தீவு
#நாவல்விமர்சனம்
கன்னித்தீவு நாவலின் அடிநாதமாகக் கடலும், காதலும் மற்றுமொரு தீவும்.. அது என்னவோ தெரியவில்லை எப்படியாவது ஏதோ ஒரு பாணியில் கடல் காதலைக் குடிக்கிறது. எப்பொழுதும் மனித இனத்தின் வியப்பான மாய மிகப்பெரிய நீர் குமிழ் கடல். பல தீவுகளை உண்டாக்கி மனிதனைத் தேடலிலே வைத்திருப்பது கடலின் வழக்கம் அல்லது விளையாட்டு. சரி நாவலின் கதாபாத்திரங்களைப் பார்ப்போம். முருகனின் பாலிருக்கும் காதலினால் எதிர்ப்புகளை மீறி மணந்துகொண்ட பார்வதி. இவர்கள் இருவரும் நாவலின் மய்ய கதாபாத்திரம் இவர்களுக்கு இணையாக மரியா.
முருகனுக்கும் பார்வதிக்கும் இடையே இருக்கும் காதல் காமத்தை வெட்கமுறச் செய்யும் அளவிற்குண்டு. பார்வதி எப்பொழுதும் முருகனின் நினைவில் உழல்வதையே போதையெனப் பருகுகிறாள். //பெண்களுக்குச் சிங்கம் மாதிரி காதலன் வேண்டும், ஆனால் அவன் நாய் போல் அவர்கள் காலடியில் குழைய வேண்டும்// மிகச்சரியா பார்வதியும் அதையே முருகனிடம் எதிர்பார்த்தாள் அதற்கு மிகக் கச்சிதமா பொருந்திப்போனான் முருகன்.பார்வதி நிறை மாத கர்ப்பிணியான பின் அனைத்தும் மறந்து தன் பெற்றோரை அழைக்கும் முயற்சியில் நீண்ட நாட்களுக்குப் பின் தந்தை மகளுக்கான அவ்வுரையால் நெகிழ்ச்சியின் படபடப்பு. முருகனின் பகுத்தறிவு பற்றிய உரையாடல்கள் ஒவ்வொன்றும் அப்லாஸ் ரகம். மற்றும் இன்னும் பிற சுவாரஸ்யமான உரையாடல்களும் ரசனையின் கன்னம். உதாரணமாக
//"நீங்க நான் வெஜ்யா?"
நாங்க பிராமின்.
அதுக்கு இது பதிலில்லையே.//
//கடிகாரத்தில் மணிக்கொரு முறை மணியடிக்கும் தருணத்தை விட இந்த முட்களின் சேர்க்கைக் கணமே என்வரையில் சுவாரஸ்யமானது. முட்கள் ஒரு நாளில் 22 முறை ஒன்றின் மீது ஒன்று படுத்துக் கொள்கின்றன. ஒரு நாளில் 22 தடவைகள் புணரலாம் என்பதுதான் ஒரு கடிகாரத்திடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி.//
//விதிகளை நிரூபிக்கும் விதிவிலக்குகள்//
இந்திய, தமிழக அரசியல், பெரியார், கற்பு, தீண்டாமை என்று அனைத்து தலைப்பையும் தலைகோதியிருப்பது இதமான தேநீர் பருகிய சாயல். கடலில் பயணப்பட்டு விபத்தின் காரணமாக நிறைமாத கர்ப்பிணியான பார்வதி கரை ஒதுங்கும் தீவு நவீன மனிதர்களையும், உலகையும் உள்வாங்க விரும்பாத தனக்கான உலகத்தில் வாழ்ந்து இயற்கையை நுகர்ந்து, உண்டு, களித்திருக்கும் பழங்குடிகளைச் சந்திக்க நேர்கிறாள்.
அத்தீவிலே பார்வதியின் தோழியென அறியப்படும் மரியாவின் நேசம் தாய்ப் பாலின் தூய்மை. பார்வதிக்கும் மரியாக்கும் இடையில் இருப்பது நட்பை மீறிய அன்பின் ஆதுரம். பார்வதி மரியாவின் குழந்தைக்குத் தமிழ் கற்றுத்தர எத்தனிப்பது ஒரு குழந்தையின் அடம். தனியாகக் கழிக்கும் நாட்களில் முருகனின் நினைவுகளைச் சுவாசிப்பது தேகத்தின் தினவைத் தணியச் செய்யும் முயற்சியா? அல்லது அவன் நினைவின் மூலம் தன் தேகத்தை விழிக்கச் செய்யும் முயற்சியா?
உண்மையில் ஒரு தீவில் உலாவி அங்கிருக்கும் பழங்களை உண்டு, அக்காற்றைக் குடித்து, அம்மேகங்களைத் தரித்து உடுத்தியது போல் ஓருணர்வு. அத்தீவில் ஒரு சுனையை எழுத்தாளர் யோனிச் சுனை என்று வர்ணிக்குமிடம் எத்தனை உண்மையான இயற்கையின் ஆதி. சுயப்பிரசவத்தின் விவரிப்பு பிரசவித்த உணர்வையும் ஒருங்கே இன்பத்தையும் தரவல்லது. இப்படியான நவீன மனிதர்களின் அழுக்குப் படாத தீவு புதிதாக பூப்படைந்த பதின் பருவ பெண்ணின் உடலைப் போன்றது. மாண்டு போகச் செய்யும் புதையல்களைக் கொண்டது. ஆகையால் இம்மாதிரியான இடங்களில் அவர்களின் அச்சமென்பது தற்காப்பாக மாறுகிறது. அதன் காரணமாக இத்தீவில் அன்னியர்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. முடிந்தவரை அவர்களை அப்படியே விட்டுவிடுவதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் பேருதவி மற்றும் இயற்கைக்குச் செய்யும் நன்றிக்கடன். நவீன மனிதர்களின் சிந்தனைகள் சரியென நாம் பயணப்பட்டுக்கொண்டிருப்பது தேவையான ஆசுவாசம். இந்நாவலின் இறுதியில் எதிர்பாராத அந்த திருப்பு முனை கருமனின் ஈட்டியெனப் பாய்ந்து இதயத்தின் துடிப்பைச் சுவைக்கிறது.
நாவலிலே எனக்கு மிகவும் பிடித்தமான வரியாக இதைச் சொல்வேன்.
//நிர்வாணத்தை மானத்தோடு தொடர்ப்பு படுத்துவதைத் தான் நாம் கலாச்சாரம் என்கிறோம். //
வாழ்த்துகள் நாவலை எழுதிய சி. சரவண கார்த்திகேயன் அவர்களுக்கு.

No comments:
Post a Comment