வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை அடுத்து குருதி ஆட்டம் படித்தேன் இக்கதைகளில் வரும் மனிதர்களின் பாசாங்கற்ற வாழ்வு, குருதியை நீரென அள்ளித் தெறிக்கும் அலட்சியமான வீரம் என்று அவர்களின் எதார்த்தம் வெகுவாக நம்மை ஈர்த்து அவர்களின் அரிவாள் மேல் இரத்தம் என உறையச்செய்கிறது. கட்டுக்கடங்காத வீரத்தின் ஆற்றலைக் கொடுத்த வாக்கிற்காக நேர்த்திக் கடன் காசாக முடிந்து கொள்ளும் குற்றப்பரம்பரையில் வரும் வேய்யன்னா மனதில் வேல் கொம்பு பாய்த்து அப்படியே உள்ளிறங்குகிறார்.
குற்றப்பரம்பரை என்ற சட்டம் வெள்ளையர் காலத்தில் குறிப்பிட்ட இனத்தவருக்கென்று இயற்றப்பட்ட சட்டமாகும். காடுகளில் விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்ந்து வந்த இனம் ஊருக்குள் வந்த பின் செய்வதறியாது களவு தொழிலில் ஈடுபட்டனர். அவர்களைப் பல் வேறு வழிகளில் ஒடுக்க நினைத்து அதில் ஒன்றாக இச்சட்டம். உண்மை என்னவென்றால் திருட்டை விட அவர்களின் வீரமும், ஆற்றலும் ப்ரிடிஷ் அரசாங்கத்தை அச்சுறுத்துவதாக இருந்தது. குற்றப்பரம்பரை நாவலில் ஒரு வசனம் வரும். "எத்தனை கோழைகள் வேண்டுமானாலும் உயிர் வாழ்ந்து கொள்ளட்டும். ஆனால், ஒரு வீரனையும் விடக் கூடாது". என்பதே அவர்களின் கோட்பாடாகவிருந்தது. எனவே, இச்சட்டத்தின் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யலாம் மற்றும் பிணையிலும் வெளியே வர முடியாது. குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது கச்சேரிக்கு வந்து கையொப்பம் இடவேண்டும் அக்குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்.
வேள் பாரியில் வரும் பறம்பு மலை வீரர்களுக்கு இணையான வீரத்தைக் காண முடிந்தது இவர்களிடத்தில். வேல ராமமூர்த்தியின் மேல் ஒரு விமர்சனம் உண்டு அவரின் கதைகள் சுயசாதி பெருமையைப் பேசுகிறது என்று அது ஒரு வலதுசாரி மனோபாவம். அதனால், அதைப் புறம் தள்ளி அவரின் எழுத்துக்குள் இறங்குவோம். பட்டவர்த்தனமாகவே அவரின் கதைகளில் அச்சமூகத்தின் அனைத்து நிலையும் விளக்கப்பட்டுள்ளது.

பவா செல்லதுரை அவர்கள் ஒரு கதையாடலின் பொழுது சொன்னார். உண்மையில் இப்படியான கதைகளின் மூலம் நம் சமூகத்தை இழிவு படுத்துகிறான் என்று அவரை கொல்ல அவரின் சமூகத்தினரே முயன்றனர் அதனால் கொஞ்சக் காலம் ஊர் பக்கமே போகாமலிருந்தார் என்றார். களவுக்கு ஆண்கள் போன பின் இரவிலே பெண்கள் மசாலா அரைக்கத் தொடங்கிவிடுவார்கள் காரமும், மணமும் எழுத்தின் வழியே நம் நாசியை அடைந்து நாவில் உமிழ் நீர் சுரக்கும். மதயானை கூட்டம் திரைப்படத்தில் அப்படியே பொருந்திருப்பார் வேல.ரா அந்த செருக்கும் மிடுக்கும் என மிரட்டியிருப்பார். இப்படியான மண்ணின் கதைகள் அவ்வப்போது தேவைப்படுகிறது நம்மை மீட்டுருவாக்கம் செய்துகொள்ள.
No comments:
Post a Comment