ஆரண்ய காண்டம் படம் பார்த்த பிறகு சூப்பர் டிலக்ஸ் படத்திற்காக மிக ஆர்வத்துடன் காத்திருந்தது வீண் போகவில்லை. முதல் காட்சி சமந்தா தன் முன்னாள் காதலுடன் கூடிய பின் அவர் இறந்துவிடும் காட்சி அதைப் பிசகாமல் கணவனிடம் சொல்லிவிட்டால் தவறில்லையா? என்ற கருத்து ஒருபுறம் இருக்கட்டும். சமந்தா பரிதாபத்தின் பெயராலும், எப்படியோ இவன் இப்படி இருப்பதிற்கு நாம் காரணமாகிவிட்டோமே என்று காதலுடன் கூடியது எதார்த்தமாக நடக்கக் கூடியதே. அவள் அதைக் கணவரிடம் சொல்லுமிடத்திலிருந்து இவ்வுண்மை எவ்வளவு தூரம் எப்படி பயணப்படுகிறது என்பதை தி.குமாரராஜா அவர் பாணியில் பொது சிந்தனையாளர்களின் மன வழியே நுழைந்து தன்நிலையில் வெளியேறி வெற்றிபெற்றிருக்கிறார்.
அடுத்ததாக பதின்வயது பள்ளி மாணவர்கள் நான்கு பேர் காணவிருக்கும் நீல படத்தில் தன் தாயைப் பார்த்து வெறித்தனத்தோடு. தாயைக் கொல்ல வரும் அந்த பையனின் மனநிலை பதட்ட உண்மையென்றாலும் தண்டனை தாய்க்கு மட்டுமே இச்சமுதாயம் தரும் என்பது என்றுமே மறுக்கப்படாத மற்றும் கூடாத விதியாகக் கடைப்பிடிக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு எந்த பண்பாட்டுக் குறையும் இல்லை. அதில் இடம் பெறுபவர்களுக்கு மட்டும் தான் . உடனே அப்போது நீல படம் பார்த்தாலே தப்பா என்றால்? இல்லை. ஆனால், அதில் இடம்பெற்றவர்களை மட்டும் பழித்து உங்கள் வன்மத்தை தீர்த்துக் கொள்ளவேண்டாம் என்பதே வேண்டுகோள். உள்ளபடியே தர்க்கங்களை கேள்விக்குறியாக்கியிருக்கிறார் தி.கு. இங்கு சரி தவறு என்று எதுமில்லை. செல்லுமிடத்தில் மட்டுமே தர்க்கம் காக்க போராடுவீர்கள் அவ்வளவே.
மெல்ல உள்ளோடி பார்த்தால். கொஞ்சமெனும் விளங்கும் அடுத்தவரைக் குறை சொல்லவோ, அறம் பிறழ்ந்தார்கள் என்று சொல்லவோ இங்கு யாருக்கும் எந்த தகுதியுமில்லை. அடுத்தவரின் கண்களைக் குத்துவது சுலபம் என்பதாலோ என்னவோ அதை சகட்டுமேனிக்கு செய்கிறோம்.
மூன்றாவதாகக் கல்யாணம் செய்து ஒரு பிள்ளையும் கொடுத்துவிட்டு ஏழு வருடங்கள் கழித்து திருநங்கையாக வரும் விஜய். சே. வழக்கமான நடிப்பில் பெண்மையான மிரட்டல். ஆரண்ய காண்டத்தில் கொடுக்காப்புளி கதாபாத்திரத்தை இங்கு ராசுக்குட்டி இடம்பெயர்த்துவிடுகிறார். அப்பா பெண்ணாகவே வந்தாலும் தன் அப்பா திருப்பி கிடைத்துவிட்ட கொண்டாட்ட மனநிலைதான் படத்தில் பாஸிடிவ் வைபரேஷன். ராசுக்குட்டியும் அவன் அப்பாவாக வரும் ஷில்பாவும் அன்பு புரளும் இடம் தனித்துவ ததும்புகள். அதுவும் கோபித்துக் கொண்டு கதவின் பின்னாலிருந்து ஒலிக்கும் அவ்வசனம் அவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி தேநீருக்குச் சர்க்கரை சேர்ப்பது போல் இணைத்திருந்தார் இயக்குநர். "யார் யாரோ கிண்டல் பண்ணாங்க நானும் அம்மாவும் எதனா சொன்னமா? நீ ஆம்பிளையாவோ இல்லை பொம்பளையாவோ எப்படி வேணா இரு. ஆனா, எங்க கூடவே இரு ". "இருந்து தொலை". என்று சொல்கிற அந்த அன்பை எதைக் கொண்டும் நிரப்ப முடியாது அது ஒரு வரைய முடியாத ஓவியம். என்ன ஒரு மனத் தடை என்றால் அவர் மனைவியாக வரும் காயத்திரியின் நிலை வருந்ததக்கதேயாகும்.
ஒரு திருநங்கையாக எதிர்கொள்ளும் வாழ்வின் அப்பட்டங்களை நிகழ்த்தி நெளிகிற செய்கிறார். காவலராக வரும் பேர்லின்(பக்ஸ்) போன்ற கதாபாத்திரங்களும் இருக்கத்தான் செய்கின்றனர் சாலையோர மலங்களைப் போல. அந்த நான்கு மாணவர்களில் காஜி என்ற கதாபாத்திரம் இயல்பாக மனதில் நின்று வெட்கமாகக் கரைகிறார். சமந்தாவின் கணவனாக உண்மை தெரிந்த அவஸ்தையில் பகத்பாசில் கொஞ்சம் ப்ளேவர் சேர்த்திருக்கிறார் அதிலும் பொதுச் சமூக கோபத்தின் வசனங்கள் இன்னும் தேன் சேர்ப்பு. யுவனின் இசை இப்படத்தில் எளிய மனிதர்கள் கடவுளுக்குப் படைக்கும் சாப்பாடு அத்தனை ருசி.
கடவுள் அர்பணைப்பாளராக வரும் மிஷ்கின் போன்ற மனிதர்களுக்கு இச்சமூகமே சாட்சி. ரம்மியாகிருஷ்னனின் வசனம் "சுனாமியின் போது நீ இந்த சிலைய பிடிக்காம ஒரு கரடி பொம்மையை கட்டி பிடிச்சிருந்தா? அதை கும்புடுவியா?" போன்ற வசனங்கள் இப்படத்தின் நாசி. நிச்சயம் புக் பண்ணலாம் இந்த சூப்பர் டிலக்ஸ்சை. ராவாத்தான் இருக்கும் துணிந்து குடிக்கலாம். மோர் ஊற்றி இறக்கிவிடுகிறார் தி.குமாரராஜா. வாழ்த்துகள்.

No comments:
Post a Comment